அவமதிக்கும் அண்ணாமலை… கழறும் தேமுதிக..? சீமானுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி..!
எடப்பாடியாரின் இந்த நிபந்தனை அண்ணாமலைக்கு தெரிய வந்த பிறகே அதிமுகவை கூட்டணிக்கு தவம் இருப்பதாக இழக்காரமாக பேசியுள்ளார் என்கிறார்கள்.
மாநிலங்களவை எம்.பி சீட்டு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூக்கிப் போட்ட அதிர்ச்சிக் குண்டால் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘‘மெகா கூட்டணி ஒன்றை அமைப்பேன். யாரும் கவலைப்படவேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஆனால், அவருடன் கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. எல்லோரும் கைநழுவிப்போன நிலையில் கூட தேமுதிக கைகொடுத்து நின்றது. ஆனால், அவர்களுக்கு எம்.பி. சீட் வழங்கப்படும் என உறுதி கொடுத்ததை எடப்பாடி பழனிசாமி இப்போது மறுத்து வருகிறார். அதுபோன்ற உத்தரவாதத்தை யாரும் கொடுக்கலையே என தேமுதிகவிற்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால கூட்டணியில் உள்ல தேமுதிகவும் வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். சமீபத்தில் அங்கீகாரம் பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சியை கூட்டணி வளையத்திற்குள் கொண்டு வர திட்டம் போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ''பெண்களே முகம் சுழிக்கும் வகையில் சீமான் பேசுவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி, ''அவரை அசிங்கப்படுத்தாதீர்கள். எங்களைப்போன்றே அவரும் கட்சி நடத்துகிறார்'' எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி... செந்தில் பாலாஜி ஆவேசம்....!
சீமானிடம் கூட்டணி குறித்து பேச எடப்பாடி பழனிசாமி தூது அனுப்பியுள்ளார். ஆனால், ''இறுதி மூச்சு உள்ளவரை தனித்தே நிற்பேன் என சீமானிடம் இருந்து பதில் வந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், ''அதிமுக கூட்டணிக்காக தவம் இருக்கிறது. எங்களை நோட்டா கட்சி என்று சொன்னவர்கள், எங்களோடு கூட்டணி வைத்ததால் தோற்றோம் என்று சொன்னவர்கள் இப்போது கூட்டணிக்கு தவம் இருக்கிறார்கள்'' சீண்டுவதால் எடப்பாடி பழனிசாமியின் நிலைமை ஊருக்கு இழைத்தவன் கதையாகி போய் விட்டது.
மூச்சுக்கு முன்னூரு தடவை பாஜகவுடன் கூட்டணியே கிடையாது எனச் சொல்லி வந்தவர் தற்போது அந்த கட்சியுடனேயே கூட்டணி சேர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தங்கள் கட்சியுடன் கூட்டணி சேர அதிமுக தவம் கிடப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இழக்காரமாகப் பேசி வருகிறார். அது குறித்து எடப்பாடியாரிடம் கேட்டபோது '' அவர் எங்களைச் சொல்லவில்லை. தவறாக பேசாதீர்கள்'' எனக் கடுப்பானார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், பாஜக கூட்டணியில் சேர நிபந்தனைகளையும் விதித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதை டெல்லி பாஜக மேலிடமும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதோடு பாஜகவுடன் கூட்டணி சேரும் நேரத்தில் அண்ணாமலையின் தலைவர் பதவியும் காலியாகப்போகிறது என்கிறார்கள். எடப்பாடியாரின் இந்த நிபந்தனை அண்ணாமலைக்கு தெரிய வந்த பிறகே அதிமுகவை கூட்டணிக்கு தவம் இருப்பதாக இழக்காரமாக பேசியுள்ளார் என்கிறார்கள்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் மரணம்..? சுகாதார அமைச்சர் அலட்சியம்..? வெளுத்து வாங்கும் அண்ணாமலை..!