×
 

எலான் மஸ்க் அமைச்சர் பதவிக்கு ‘முழுக்கு’..? என்ன காரணம்..?

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் அமைச்சர் பதிவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், அதிபர் ட்ரம்ப் அரசில் செயல்திறன் துறை அமைச்சராக இருக்கும் எலான் மஸ்க் அமைச்சர் பதிவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் மே மாதம் இறுதியுடன் அமைச்சர் பதவிக்கு முழுக்குப் போட்டு சொந்தப் பணியை தொடர இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபராக 2வதுமுறைய டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்க அரசில் செயல்திறன் துறை அமைச்சராக சிறப்பு அரசு ஊழியராக தற்காலிகமாகப் பணியாற்றி வருகிறார். இவரின் பதவிக்காலம் குறைந்தபட்சம் 130 நாட்கள் முதல் ஓர் ஆண்டாகும். 

அது மட்டுமல்லாமல் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட ஆலோசகராகவும் எலான் மஸ்க் நியமிக்ககப்பட்டுள்ளார். அமெரிக்க அரசில் இருக்கும் தேவையற்ற செலவுகள், மற்ற நாடுகளுக்கு அளிக்கும் நிதியுதவிகள் சரியானதா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பு ஆகியவற்றை செய்து, அரசுக்கு 6லட்சம் கோடி டாலர் செலவுகளை இதுவரை எலான் மஸ்க் குறைத்துள்ளார்.

இதையும் படிங்க: எலான் மஸ்குக்கு என்ன ஆச்சு..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!

அமெரிக்க அரசில் அளவுக்கு அதிகமாக ஒவ்வொரு துறைகளிலும் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறார். இதனால் எலான் மஸ்க்கால் வேலையிழந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் செயல்படும் எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம், விற்பனை நிலையத்தின் முன் கூச்சலிட்டு போராட்டம் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் எலான் மஸ்கிற்கு மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ஃபாக்ஸ் சேனலுக்கு எலான் மஸ்க் சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “என் அமைச்சரவை எடுத்த நடவடிக்கையால் தினசரி அமெரிக்க அரசு 400 கோடி டாலர்களை வீணாக செலவு செய்ததை நிறுத்திவிட்டோம், எங்களை எதற்காக அதிபர் ட்ரம்ப் நியமித்தாரோ அந்த இலக்கை 130 நாட்களில் எட்டியிருக்கிறோம். எங்களுக்குரிய காலக்கட்டத்துக்குள் அமெரிக்க அரசின் வர்த்தகப் பற்றாக்குறையையும் சரி செய்துவிடுவம்.

என்னுடைய செயல்திறன் துறையும், அதிகாரிகளும் சேர்ந்து கோடிக்கணக்கான டாலர்களை அரசுக்கு சேமித்துள்ளோம். அமெரிக்க அரசு திறமையான அரசு அல்ல, ஏராளமான நிதியை வீணாக்குகிறது, மோசடிகள் நடக்கின்றன. அமெரிக்க அரசு செலவுகளில் இதுவரை 15% குறைத்துவிட்டோம்.அமெரிக்காவின் நிதிமேலாண்மை மேம்பட்டுள்ளது. ஆனால் என் மீதும், டெஸ்லா நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. என்னுடைய செயல்திறன் துறை அமெரிக்க அரசின் சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

என்னுடைய நடவடிக்கையால் டெஸ்லா நிறுவனப் பங்குகள் விலை சரிந்துவிட்டன, என் மீது கடும் விமர்சனங்கள் வருகின்றன, டெஸ்லாவுக்கு எதிராக போராட்டம் நடக்கின்றன. ஆதலால் மே மாத இறுதிக்குள் என் பதவிக்காலத்திலிருந்து விலகுவது குறித்து ஆலோசிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தொடரும் எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கை! ஏலத்தில் விடப்பட்ட ட்விட்டர் பறவை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share