இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு.. மூட்டை முடிச்சுகளுடன் காஸாவைவிட்டு வெளியேறும் மக்கள்..!
காஸா நகர் மீது ராணுவத் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர்.
காஸா நகர் மீது ராணுவத் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, காஸாவில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சுகளுடன் குடும்பத்துடன் வெளியேறுகிறார்கள். காஸா மீது செவ்வாய்கிழமை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ராணுவம் காஸாமீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் காஸாவில் ஆண், பெண்கள், குழந்தைகள் என 700 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்- கொல்லப்பட்ட ஹமாஸ் முக்கியத் தலைவர்..!
பாலஸ்தீனத்தின் காஸா நகரம் ஏறக்குறைய சிதைக்கப்பட்டுவிட்டதால், அங்கிருந்து 23 லட்சம் மக்கள் ஏற்கெனவே புகலிடம் தேடி வேறு இடத்துக்கு சென்றுவிட்டனர். கடந்த 18 மாதங்களாக ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நடக்கும் போரில் மக்களுக்கு குடிநீர், உணவு, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் காஸிவின் வடக்கு எல்லைப்பகுதியில் இருக்கும் மக்கள் வேறு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள், ராணுவநடவடிக்கை தொடரக்கூடும் என எச்சரித்துள்ளது.
காஸாவில் உள்ள ஜபாலியா, பெட் லாஹியா, பெட் ஹானுன், ஷீஜா ஆகிய நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மிகப்பெரிய அகதிகள் முகாம் இருக்கும் ஜபாலியாவில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாலஸ்தானம் மற்றும் ஐநா. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “காஸா நகரில் பாதுகாப்பான பகுதிகள் ஏதுமில்லை” எனத் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் “ காஸில் வைக்கப்பட்டிருக்கும் இன்னும் 59 இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவிக்க வேண்டும். 24 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புவோம்” எனத் தெரிவித்தார்.
2023, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய போது கடந்த 18 மாதங்களாக நடந்து வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தில் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 250 இஸ்ரேலியர்களை பிணையக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் வைத்துள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை காஸாவில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக இந்திய மாணவர் கைது.. அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!