5.32 லட்சம் பேர் நாடு கடத்தல்... டிரம்ப் அதிரடி முடிவு... யார் அவர்கள்?
அமெரிக்க அதிபரின் அதிரடி உத்தரவால் 5.32 லட்சம் பேர் நாடுகடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை நாடு கடத்தினார். அதில் இந்தியர்கள் 300க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதனிடயே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இருந்தபோதிலும் டிரம்ப் நாடு கடத்துவதை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாட்டை சேர்ந்தவர்களின் சட்டப் பாதுகாப்பை ரத்து செய்யப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட நாட்டில் சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் டிரம்பின் உத்தரவு பொருந்தும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மெக்சிகோவின் தரமான செய்கை... உச்சக்கட்ட பதற்றத்தில் டிரம்ப்!!
அவர்கள் 30 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களை வெளியேற்றும் விதமாகத்தான் டிரம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் உத்தரவால் இனி அவர்களின் சட்ட பாதுகாப்பு நீக்கப்படும். இதனால் அவர்களுக்கு அமெரிக்காவில் என்ன கொடுமை நேர்ந்தாலும் அவர்கள் வழக்கு போட முடியாது என்று கூறப்படுகிறது.
மேலும் அவர்களை போலீசோ, அந்நாட்டு நீதிமன்றமோ பாதுகாக்காது என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் ரிருக்க மறுபுறம் டிரம்ப், அவர்களை ஒரு மாதத்தில் நாடுகடத்த போவதாகவும் அறிவித்து உள்ளார். இதனிடையே அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா வரியை குறைத்தாலும் நான் குறைக்க மாட்டேன்... உச்சக்கட்ட பிடிவாதத்தில் டிரம்ப்!!