×
 

ஐடி ஊழியர்களை நெருங்கிய சிக்கல்... தடுமாறும் ஐடிதுறை; சரியும் பங்குகள்... காரணம் இதுதானாம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியபடி நாளை முதல் வர்த்தக போர் தொடங்க உள்ள நிலையில் இன்று முதலே ஐடி துறையின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளன.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். விசா கட்டுப்பாடு, குடியுரிமை, வரி உள்ளிட்டவை மற்ற நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அண்டை நாடுகள் அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக இந்தியா கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்தியர்கள் அங்கே வேலைகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்திருந்தது.

மேலும் டிரம்பின் வரி மற்றும் விசா குடியேற்றக் கொள்கைகள் ஐடி ஊழியர்களை பாதிக்கும் என்றும் இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும் என்றும் மூடிஸ் நிறுவனம் ஆய்வில் கூறப்பட்டிருந்தது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அதன்படி, நாளை முதல் நாளை தொடங்கும் வர்த்தக போர் தொடங்கும் என தெரிகிறது. இதனால் ஐடி துறை பாதிக்க தொடங்கி உள்ளது. டிரம்ப் விதிக்கும் வரிகள் காரணமாக ஐடி துறையின் பங்குகள் பங்குசந்தையில் கடுமையாக சரிய தொடங்கி உள்ளது. இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் இன்று 4 சதவீதம் வரை சரிந்தன.

இதையும் படிங்க: கடல்சார் சுரங்கத்திற்கான டெண்டர் விவகாரம்… மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்காந்தி!!

ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும். Coforge, HCL Technologies மற்றும் LTIMindtree போன்ற IT மேஜர்கள் முறையே 2.76 சதவீதம், 2.78 சதவீதம் மற்றும் 2.65 சதவீதம் சரிவை சந்தித்தன. பெரிய நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களும் 2 சதவீதம் வரை இழந்தன.

ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் வருடத்திற்கு சுமார் $7 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருடா வருடம் இந்தியாவிற்கு இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: பேபிஸ்களுக்கு இந்தியா தான் பெஸ்ட்.. வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கருத்து!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share