கோடி ரோட்ஸை வீழ்த்திய ஜான் சீனா.. 17வது முறையாக WWE சாம்பியன் பட்டம் வென்று சாதனை!!
கோடி ரோட்ஸை வீழ்த்தி ஜான்சீனா 17 வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
டபிள்யூ.பி.எல்லில் 90’ஸ்-களின் ஹீரோவாக விளங்கியவர் அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான்சீனா. இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தின் மாசசூசெட்ஸில் பிறந்த இவர், தனது குழந்தைப் பருவத்தை நியூபரிபோர்ட் மற்றும் சாலிஸ்பரி கடற்கரை அருகே உள்ள ஒரு சிறிய நகரில் கழித்தார். பின்னர் அவர் தனது இருபதுகளில் நியூ இங்கிலாந்தில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார். டபிள்யூ.பி.எல்லில் முன்னணி வீரர் ஆனா இவர் தற்போது சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு WWE WrestleMania 41வது தொடர் நடைப்பெற்றது. WrestleMania தொடருடன் WWE போட்டிகளில் ஓய்வு பெறப்போவதாக ஜான் சீனா அறிவித்த நிலையில், இன்று நடைப்பெற்ற அவரது போட்டி பெரும் எதிர்பார்ப்பினை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. போட்டி தொடங்கியது முதலே, கோடி ரோட்ஸ் ஜான்சீனாவை அடித்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்த போட்டியின் கடைசி நொடி வரை நன்றாக அடி வாங்கிய ஜான்சீனா, ஒரு கட்டத்தில் அடி வாங்குவது, திருப்பி தருவது என செய்துகொண்டிருந்தார்.
இதையும் படிங்க: “எனக்கு அதிகாரமே இல்ல” - பேரவையிலேயே புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
அப்போது டிராவிஸ் ஸ்காட் தீடீரென்று உள்ளே வந்தார். கோடி ரோட்ஸ் ஜான் சீனாவை விட்டுட்டு, டிராவிஸ் ஸ்காட்டை அடித்துக் கொண்டு இருந்தார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட, ஜான் சீனா, நடுவர் கீழே இருந்த சமயத்தில், WWE பெல்ட் கொண்டு கோடி ரோட்ஸ் தன்னை தாக்க முயன்ற போது எதிர்பாராமல் கோடி ரோட்ஸை அதிரடியாக தாக்கினார்.
அப்போது கோடி ரோட்ஸ் நிலைகுலைந்து போனார். இதை அடித்து நடுவர் வளையத்திற்குள் வருவதற்குள் ஜான் சீனா கோடி ரோட்ஸை பெல்ட்டால் தாக்கியினார். இதன் மூலம் போட்டியும் முடிவுக்கு வந்தது. ஜான்சீனா கோடி ரோட்ஸை வீழ்த்தி 17 வது முறையாக WWE சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். 16 முறை WWE சாம்பியன் பட்டத்தை ரிக் ஃபிளேர் வென்றதை இதுநாள் வரை WWE-ல் சாதனையாக இருந்தது. தற்போது ஜான் சீனா அதை முறியத்துள்ளதால் முன்னாள் மல்யுத்த வீரர்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த பிரதமர் வேட்பாளர் ‘யோகி ஆதித்யநாத்’.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு..!