×
 

பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!

பரபரப்பான அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை ஏற்றுக்கொள்ளாமல் கிடப்பில் போட்டார். அன்று முதல் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனிடையே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார். இதை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும். 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதையும் படிங்க: இவர்கள் அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுபுள்ளி... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல் வரவேற்பு!!

இந்த நிலையில் தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற வெற்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம், மற்றும் மாநில சுயாட்சி தொடர்பாக நேற்று முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், முதல்வரை கொண்டாடுவதற்காக வந்ததாக தெரிவித்தார். 

மேலும், ராஜ்யசபா சீட்டுக்காக நன்றி தெரிவிக்க வந்தீர்களா என செய்தியாளர்கள் கேட்டார்கள். சீட் முடிவு செய்யப்பட்டு கட்சியில் முடிவு செய்து அறிவிக்கும்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது வந்திருப்பது கொண்டாடுவதற்காக. இந்த தீர்ப்பு, உச்சநீதிமன்ற ஆளுநர் வழக்கில் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டு சொல்ல வந்தேன். நமக்கு சாதகமானது என்பதை விட இந்தியாவிற்கு சாதகமானது. இந்த தீர்ப்பு இவர்கள் போட்ட வழக்கில் வந்திருக்கிறது என்பதால் கொண்டாடப்பட வேண்டியவர் முதல்வர். தேசிய அளவில் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் அமைத்த குழு வெளிப்படையாக செயல்படும்..! நீதிபதி குரியன் ஜோசப் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share