×
 

"இங்க நடந்ததை உங்க பிரதமர் மோடிக்கிட்ட சொல்லு".. பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி..!

பள்ளத்தாக்கில் தனக்கு ஏற்பட்ட துயரம் மற்றும் பயங்கரவாதிகளுடன் தனது சந்திப்பு குறித்து கூறியுள்ளார் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றலா பயணிகள் மீது நேற்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் கர்நாடகாவின் சிவமொக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் நேற்று ஜம்மு காஷ்மீரில் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்த 27 சுற்றலா பயணிகளில் ஒருவர் ஆவார். நான்கு நாட்களுக்கு முன்பு விடுமுறையில் தனது மனைவி பல்லவி மற்றும் மகன் அபிஷேகாவுடன் காஷ்மீருக்கு ராவ் சென்றிருந்தார். 

நேற்று காலை பள்ளத்தாக்கில் மேகமூட்டம் ஏற்பட்டதையடுத்து குடும்பத்துடன் தாங்கள் நலமாக இருப்பதை ஒரு வீடியோவாக பதிவு செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இப்பகுதியில் நடந்த மிக மோசமான நிகழ்வு மாம்கோஷின் மேலாளரான பல்லவி உதவி கோரி தனது அலுவலகத்திற்கு போன் செய்து தனது கணவரின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: பாரமுல்லாவில் பதற்றம்! 2 தீவிரவாதிகளை வேட்டையாடிய ராணுவம்

பியூ தேர்வில் 98% மதிப்பெண் பெற்ற தங்கள் மகனின் வெற்றியை கொண்டாட குடும்பத்துடன் காஷ்மீருக்கு ஒரு நிறுவனம் மூலம் சென்றதாக உறவினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தனது கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டுவர உதவி கோரியுள்ள பல்லவி, பள்ளத்தாக்கில் தனக்கு ஏற்பட்ட துயரத்தையும் பயங்கரவாதிகளுடன் தனது சந்திப்பையும் கன்னட தொலைக்காட்சி சேனல்களுக்கு விவரித்துள்ளார். 

“நாங்கள் விடுமுறைக்காக இங்கு வந்தது எங்களோட பெரிய துரதிஷ்டம். பஹல்காமில் உள்ள மினி சுவிட்சர்லாந்த்ன்னு சொல்லப்படுகிற இந்த மலையில் குறைந்தது 500 சுற்றலா பயணிகள் இருந்தாங்க. நாங்கள் குதிரையில ஏறி மலை ஏறினோம். நாங்க மலை உச்சி அடைந்தோம். துப்பாக்கி சத்தம் கேட்டுச்சு ஏதோ ராணுவ நடவடிக்கைன்னு நாங்களும் அப்படியே விட்டுட்டோம். என் மகன் பசியுடன் இருந்ததால் என்னோட கணவர் பக்கத்துல இருக்க உணவகத்துக்கு சென்று ஏதாவது வாங்கலாம்னு போனாரு. ரொம்ப நேரமா என்னோட கணவர் வரல மக்கள் கூட்டம் கூட்டமா ஓட ஆரம்பிச்சத நாங்க பார்த்தோம். நான் என் கணவரை தேட ஆரம்பிச்சேன். நான் என் மகனை அழைச்சிட்டு பார்க்கும்போது இரத்த வெள்ளத்தில் கிடந்த என் கணவரை  பார்த்தேன். தீவிரவாதிகள் என்னோட கணவரோட தலையில சுட்டுருந்தாங்க" என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பயங்கரவாதியும் என் முன்னாடி நின்னுட்டு இருந்தான் நான் அவனிடம் நீ என் கணவரை கொன்னுட்ட என்னையும் கொன்னுடுன்னு கேட்டேன். என்னோட மகனும் அவனிடம் நாயே நீ என் தந்தையை கொன்னுட்ட இப்ப எங்க ரெண்டு பேரையுமே கொன்னுடுன்னு கேட்டான். அதற்கு அவன் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் உன்னை கொல்ல மாட்டேன். இங்கே நடந்ததைப் போய் மோடியிடம் புகார் செய் என்று சொன்னான் அப்புறம் அவன் அங்கிருந்து போய்விட்டார்” என இவ்வாறாக பல்லவி தீவிரவாதிகளுடன் செய்த வாக்குவாதத்தை பற்றி விவரித்திருந்தார். 

இதையும் படிங்க: #JUST NOW: பாரமுல்லாவில் பதற்றம்... 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share