×
 

கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு... இன்றும் நாளையும் இங்கு செல்ல தடை விதிப்பு...! 

கொடைக்கானலில்  பேரிஜம் ஏரிக்கு எந்தவித காரணமின்றி 19.02.2025 மற்றும் 20.02.2025 ஆகிய  இரண்டு நாட்கள்  சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

கொடைக்கானலில்  பேரிஜம் ஏரிக்கு எந்தவித காரணமின்றி 19.02.2025 மற்றும் 20.02.2025 ஆகிய  இரண்டு நாட்கள்  சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள் , குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். 

இதையும் படிங்க: திருடன், போலீஸ் விளையாட்டால் விபரீதம்.. பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் சிறுவன் மரணம்..!

இதில் வனத்துறை கட்டுப்பாட்டில் முழுவதுமாக இருக்கக்கூடிய பேரிஜம் ஏரிக்கு வனத்துறை இடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று தான் பேரிஜம் ஏறி பகுதிக்கு செல்ல முடியும் இந்த பேரிஜம் ஏரிக்கு செல்லக்கூடிய பகுதிகளில் மதிக்கட்டான்சோலை , தொப்பி தூக்கி பறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. தற்போது நிர்வாக காரணங்களால் பேரிஜம் ஏரிக்கு செல்லக்கூடிய சிறப்பு அனுமதி இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ‘டெஸ்லா கார்’ வாங்கலியா! இந்தியாவில் விற்பனை ஏப்ரலில் தொடக்கம்! விலை தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share