×
 

‘கும்பமேளாவை போர்க்களமாக மாற்றுவோம்’: காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை

காலிஸ்தான் தீவிரவாதி மத்திய அரசுக்கு மிரட்டல் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்க உள்ள மகா கும்ப மேளாவை நடக்கவிடாமல் அதை போர்க்களமாக மாற்றுவோம்..

தடைசெய்யப்பட்ட சீக்கிய அமைப்பான காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கும்ப மேளா என்றால் என்ன?

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா கும்பமேளா. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை நதி மற்றும் துணை நதிகளில் இந்த பண்டிகை மக்களால் கொண்டாடப்படுகிறது. கும்ப மேளா 4 நகரங்களில் 4 நதிகளின் கரைகளில் நடக்கும். கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகர், கங்கை நதி செல்லும் ஹரித்துவார், கோதாவரி செல்லும் நாசிக், சிப்ரா நதி அமைந்த உஜ்ஜைன் நகரங்களில் மகா கும்பமேளா நடக்கும்.
இந்த மகா கும்பமேளா நடக்கும் நாட்களில் அங்குள்ள நதிகளில் சென்று புனித நீராடினால் செய்த பாவங்கள் அகலும், மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.


கும்ப மேளா எப்போது தொடக்கம்
2025ம் ஆண்டு கும்ப மேளா ஜனவரி 13ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி மகா சிவாராத்திரி அன்று நடக்கிறது. இந்த கும்ப மேளாவை சிறப்பாக நடத்தி முடிக்க உத்தரப்பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை, பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. இந்த கும்ப மேளாவில் நாடுமுழுவதும் 40 கோடி மக்கள் வருவார்கள் என்று உ.பி. அரசு நம்புகிறது.
இந்த கும்ப மேளாவுக்கு பக்தர்கள் வருகை தர வசதிக்காக 13 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மக்கள் வசதிக்காக கங்கை நதியின் குறுக்கை தற்காலிகப் பாலங்கள், தீவிரமான கண்காணிப்புகள், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு என மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமான ஏற்பாடுகளை செய்துள்ளன.


இந்நிலையில் கும்ப மேளா பண்டிகையை உருக்குலைப்போம் போர்க்களமாக மாற்றுவோம் என்று காலிஸ்தான் தீவிர அமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே முதல் எச்சரிக்கை செய்து வீடியோ வெளியிட்ட நிலையில், கடந்த 10 நாட்களுக்குள் 2வது முறையாக எச்சரிக்கை செய்து காலிஸ்தான் அமைப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. காலிஸ்தான் அமைப்பின் தீவிரவாதியும், தடை செய்யப்பட்ட சீக்கிய அமைப்பின் தலைவரான குர்ப்வந்த் சிங் பன்னும் வெளியிட்ட வீடியோவில் “ எதிர்ப்பை வெளிப்படுத்த பிரயாக்ராஜ் செல்லுங்கள், இந்துத்துவா சித்தாந்தத்தை கொல்லுங்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு நிற துப்பட்டாவுக்கே பயந்துட்டாரு ..செயலற்ற திமுக அரசு ..சட்டபேரவையில் எடப்பாடி சரவெடி ..!

அது மட்டுமல்லாமல் லக்னெள , பிரயாக்ராஜ் விமான நிலையங்களில் காஷ்மீர் கொடி, காலிஸ்தான் கொடியை உயர்த்துங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு குர்பந்த்வந்த் அறிவுறுத்தியுள்ளார். 
வீடியோவில் இறுதியாக குர்பந்த்வந்த் பேசுகையில் “ 2025ம் ஆண்டு நடக்கும் மகா கும்பமேளா போர்க்களமாக மாறும்” எனச் எச்சரித்து முடித்தார். 
கடந்த 10 நாட்களுக்குள் பன்னும் மத்திய அரசுக்கு விடுத்த 2வது எச்சரிக்கை வீடியோவாகும். முன்பு வெளியிட்ட வீடியோவில் கும்ப மேளா நடக்கும் நாட்களான மகா சங்கிராந்தி(ஜன.14), மவுனி அமாவாசை(ஜனவரி 29), பசந்த் பஞ்சமி(பிப்ர 3) ஆகிய நாட்களில் மக்கள் வரும்போது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோம், நடத்தவிடமாட்டோம்” என மிரட்டல் விடுத்திருந்தார்.


பன்னுன் மிரட்டலுக்கு அகில பாரதிய அகாதா பரிஷத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் மகந்த் ரவீந்திர பூரி கூறுகையில்  “ இந்த மிரட்டல்கள், எச்சரிக்கைகள் என்பது அறிவில்லாதவர்கள் பேச்சு. பன்னுன் என்ற பெயருடன் கும்பமேளாவுக்கு வந்தால், கடுமையாகத் தாக்கப்பட்டு, வீசப்படுவார். இதுபோன்ற நூற்றுக்கணக்கான முட்டாள்களை பார்த்துவிட்டோம். சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும் ஒற்றுமை ஏற்பட வேண்டும், ஆனால், பன்னுள் வேறுபாட்டை உருவாக்குகிறார். இந்த மகா மேளாவில் இந்துக்களும், சீக்கியர்களும் ஒன்றாக இருக்க வேண்டும். சீக்கியர்கள் சனாதன தர்மத்தை பாதுகாக்கிறார்கள், அதை வாழவைத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சினையை, ஐ.நா சபைக்கு கொண்டு சென்று இருக்கக் கூடாது ; நேருவின் தவறுகளில் இதுவும் ஒன்று; மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குற்றச்சாட்டு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share