×
 

சீமான் பிரபாகரனைச் சந்தித்தது உண்மையா? - எல்டிடிஇ வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! 

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை. ஆனால் புகைப்படம் வழங்கப்படவில்லை, பயிற்சிகள் ஏதும் தரப்படவில்லை என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை. ஆனால் புகைப்படம் வழங்கப்படவில்லை, பயிற்சிகள் ஏதும் தரப்படவில்லை என்றும், தமிழ் தேசியம் என்ற பெயரில் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி வழங்க வேண்டாம் என்றும் எல்டிடிஇ அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் என்பவர் பெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில் “பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் நடவடிக்கைகளை கொள்ள வேண்டும் என்றும், தலைவரையும் முன்னிறுத்தி செய்யப்படுகின்றவர் உடனடியாக நிறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்வினையாற்றவோ. செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

இதையும் படிங்க: “நான் பிரபாகரனைச் சந்திக்கவே இல்லை” ... சீமான் அடித்த திடீர் பல்டி - காரணம் என்ன? 

திரு சீமான் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகின்றோம். இந்த சர்ச்சையான கருத்துக்கள் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் இழிவு படுத்துகின்ற, கொச்சைப்படுத்துகின்ற செயல் என்பதையும் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.

நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் நடவடிக்கைகளை கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். 

விடுதலைக்குப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும், இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது என்பதையும் மிகவும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: பெரியாரா? பிரபாகரனா? மோதிப் பார்த்துவிடலாம் - சீமான் ஆவேசம்....

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share