×
 

"லிவ் இன் பார்ட்னர்" காதலி கொலை; உடலை, 6 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்து பூட்டிய கொடூரன் கைது...

வாடகை அறையில் ஒன்றாக வசித்த காதலியை கொலை செய்து , 6 மாதங்களாக பிரிட்ஜில் வைத்துப் பூட்டிய கொடூரன் கைது செய்யப்பட்டான்.

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அருகே நடந்துள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

இந்தூர் அருகே பிருந்தாவன் தாம் பகுதியில் இருந்த வாடகை அறையில் வசித்து வந்தவர், சஞ்சய் படிதார். அவருடைய காதலி பிங்கி என்கிற பிரதிபா பிரஜாபதி என்ற பெண்ணுடன் அந்த அறையில் அவர் வசித்து வந்தார். 

அவர் வசித்த அறைக்கு அருகே மேலும் இரண்டு அறைகள் இருந்தன. அவை பூட்டப்பட்டு இருந்ததால் அவற்றை சஞ்சய் பயன்படுத்துவதில்லை. இதற்கி டையில் சஞ்சய் கடந்த ஆறு மாதங்களாக பிங்கியுடன் அந்த அறையில் குடித்தனம் நடத்தவில்லை. 

இதையும் படிங்க: சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை: இதயத்தை கிழித்த கொடூரம்.. 4 துண்டுகளாக வெட்டப்பட்ட கல்லீரல் ......பகீர் தகவல்கள்

வீட்டை காலி செய்வதாக  பூட்டி விட்டு சென்ற அவர் பயன்படுத்தாமல் பூட்டிய அறையில் தனது ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட சில பொருட்களை மட்டும்  ஒரு அறையில் வைத்து விட்டு சென்றார். விரைவில் அந்த பொருட்களை காலி செய்து விடுவதாக வீட்டு உரிமையாளரிடம் அவர் சொல்லி இருந்தார்.

ஆனால் அவர் கூறியபடி காலி செய்யவில்லை. அவர் மட்டும் அவ்வப்போது அறைக்கு வந்து செல்வார். அக்கம் பக்கத்தினர் பிங்கி பற்றி கேட்டால் அவர் தனது தந்தை வீட்டிற்கு சென்றிருப்பதாக சமாளித்து வந்தார். 

இந்த நிலையில் சஞ்சய் காலி செய்த பிறகு பல்வீர் ராஜ்புத் என்பவர் அந்த அறையை வாடகைக்கு எடுத்திருந்தார். தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்து வர வேண்டியது இருப்பதால் மற்ற இரண்டு அறைகளையும் பயன்படுத்த அனுமதிக்குமாறு வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு அவர் சம்மதம் பெற்றார். 

கடந்த வியாழக்கிழமை அன்று பல்வீர் அறையின் பூட்டை உடைத்து பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டி தொடர்ந்து இயங்கி வந்ததை பார்த்து திடுக்கிட்டார் அடைந்தார். இதனால்தான் மின் கட்டணம் அதிகமாக வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட அவர், சஞ்சையின் கவனக்குறைவால் இது நடைபெற்று இருக்கலாம் என்று தான் முதலில் கருதினார். 

மறுநாள் வெள்ளிக்கிழமை அந்த பகுதி முழுவதும் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது சிதைந்த நிலையில் பெண்ணின் உடல் போர்வையில் சுற்றி மடக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சஞ்சயௌ போலீசார் வலைபேசி தேடி கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்தி விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தான் பிங்கி என தெரிய வந்தது. 

ஐந்து ஆண்டுகளாக பிங்கியுடன் ஒன்றாக சஞ்சய் குடித்தனம் நடத்தி இருக்கிறார். சமீபத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிங்கி சஞ்சயை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் ஏற்கனவே திருமணம் ஆன தனக்கு  இரண்டு குழந்தைகள் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது என்று சஞ்சய் மறுத்திருக்கிறார்.

திருமணத்தில் பிங்கி தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததால் ஆத்திரமடைந்த சஞ்சய் நண்பர் வினோத் டேவின் துணையோடு பிங்கியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஃப்ரிட்ஜில் வைத்து சென்றதாகவும் போலீசாரிடம் அவர் ஒப்புக்கொண்டார்.

சஞ்சய் ராஜஸ்தானில் ஒரு முறை குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட பிங்கி அனைவரிடமும் சகஜமாக பழகி வந்தவர் என்றும் வீட்டில் வளையல் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர். 

திருமணம் ஆகாமலேயே காதலி அல்லது தோழிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது (லிவ் இன் டுகெதர் ) தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. மரபுக்கு மாறான இந்த புதிய உறவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இது போன்ற கொலைகள் உதாரணமாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: சோளக்காட்டில் சித்ரவதை ..பெண்ண சிதைத்த கொடூரனை தட்டி தூக்கிய போலீஸ் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share