×
 

பாகிஸ்தான் அரசை விரலைவிட்டு ஆட்டும் 32 வயது பலூச் பெண்: தலைவலியாக மாறிய வீர தீர மஹ்ரங்..!

பலூச் பகுதி முழுவதும் நீண்ட காலமாக காணாமல் போன மக்களின் நலனுக்காக மஹ்ரங் போராடினார். 2024 ஆம் ஆண்டில், மெஹ்ராங் பலுசிஸ்தான் முழுவதும் பயணம் செய்து மக்களை ஒன்றிணைத்தார்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் சமூக ஆர்வலர் மஹ்ரங் பலோச் மீது நடவடிக்கை எடுப்பது பாகிஸ்தான் அரக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மஹ்ராங்கிற்கு ஆதரவாக பலுசிஸ்தான் முதல் கராச்சி வரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பலூச் விடுதலைப் படையின் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் அரசு, மஹ்ரங்கை ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டியுள்ளது.

32 வயதான மஹ்ரங் பலோச் 2018 முதல் பலுசிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, மஹாரங் சமூக சேவையில் படு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். மஹ்ரங்கின் தந்தையும் பலுசிஸ்தானின் ஒரு பெரிய ஆர்வலராக இருந்தார். அவர் 2011-ல் கொலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ஆபத்தில் பாகிஸ்தான்... ஷாபாஸ் அரசு மீது கடும் கோபம்: போருக்கு அழைப்பு விடுக்கும் ராணுவத் தளபதி..!

பலூச் ஆர்வலர் அப்துல் கஃபார் -லாங்கோ தம்பதிக்கு 1993-ல் மகளாக பிறந்த மஹ்ரங், பாகிஸ்தானில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். மஹ்ரங் போலன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டில், பிபிசியின் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மஹ்ரங் சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் அரசியலில், மஹ்ரங் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸுடன் ஒப்பிடப்படுகிறார். மரியம் நவாஸும் பாகிஸ்தானில் படித்தார். அவர் லாகூரில் உள்ள ஒரு கல்லூரியில் சாதாரண முறையில் பட்டப்படிப்பை முடித்தார். மரியம் இப்போது அதிகாரத்தின் உயர் பதவியில் இருந்தாலும், பாகிஸ்தானின் அரசியல் வட்டாரங்களில் அவர் ஒரு போராளிப் பெண்மணியாக அரிதாகவே விவாதிக்கப்படுகிறார்.

மஹ்ரங், பலோச்சின் விடுதலைப்படையில் இணைந்தார். ஆனாலும் வீட்டுப்பொறுப்புகளை கவனித்து வந்தார். இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டில், மஹ்ரங்கின் சகோதரரும் காணாமல் போனார். அதன் பிறகு மஹ்ரங்கே பலூச் விடுதலைப் படையில் தீவிரமாக களமிறங்கினார். அவர் தனது பேச்சுகளால் பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

பலூச் பகுதி முழுவதும் நீண்ட காலமாக காணாமல் போன மக்களின் நலனுக்காக மஹ்ரங் போராடினார். 2024 ஆம் ஆண்டில், மெஹ்ராங் பலுசிஸ்தான் முழுவதும் பயணம் செய்து மக்களை ஒன்றிணைத்தார். மஹ்ரங்கின் வருகை காரணமாக, பலூச் போராளிகள் சுறுசுறுப்பான நிலையில் இருப்பதாக பாகிஸ்தான் அரசு நம்புகிறது. ஆனாலும், அட்டூழியங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மோசமான விஷயம் அல்ல என்று மஹ்ரங்கும், அவரது கூட்டாளிகளும் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: ரயில் கடத்தல்: பாகிஸ்தானின் 214 இராணுவ வீரர்களையும் கொன்று குவித்த பலுச் விடுதலைப் படை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share