நான் வைகோவின் சேனாதிபதி! அவரு தான் இவரா? விசுவாசத்தை சூசகமாக சொன்ன மல்லை சத்யா..!
மல்லை சத்யாவால் தான் துரை வைகோ பதவியை விட்டு விலகியதாக பேசப்படும் நிலையில், தான் வைகோவின் சேனாதிபதி என மல்லை சத்யா கூறியுள்ளார்.
மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். தனது அறிக்கையில் கட்சிக்கு ஒருவர் களங்கம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார். யார் அந்த ஒருவர் என்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது மல்லை சத்யா தான் என பேசப்பட்டு வருகிறது.
துரை வைகோ - மல்லை சத்யா விவகாரம் குறித்து பேச இன்று அவசரமாக மதிமுக நிர்வாக குழு கூடுகிறது. இந்த நிலையில், வைகோ முகம் பதித்த மோதிரம், சட்டை பாக்கெட்டில் வைகோ புகைப்படம் இதுவே என் அடையாளம் என மல்லை சத்யா கூறியுள்ளார். ராமனின் மோதிரத்தை அனுமன் சீதைக்கு காட்டியதைப் போல வைகோவின் முகம் பதித்த மோதிரமே எனது அடையாளம் எனக் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சேனாதிபதி நான்" என துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பதிவிட்டுள்ளார். மல்லை சத்யாவுக்கு எதிராகவே, கட்சி பதவியை துரை வைகோ துறந்ததாக கூறப்படும் நிலையில் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ..! விலகலை ஏற்க மறுக்கும் மதிமுக..!
இதையும் படிங்க: கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ..! யார் அந்த ஒருவர்..? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!