யாருய்யா நீ...20 திருமணம், 104 பசங்கன்னு வாழும் அதிசய மனிதன்!!
தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் 20 திருமணம் செய்துகொண்டு 104 குழந்தைகள் மற்றும் 144 பேரக்குழந்தைகளுடம் வாழ்ந்து வருகிறார்.
நமது நாட்டில் தற்போது இருக்கும் விலைவாசிக்கு மத்தியில் கல்யாணம் பண்ணிக்கவே பயமாக இருக்கு என்று இளைஞர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஆகும் செலவை நினைத்து தினமும் பயந்து வருகின்றனர். இப்படியாக வாழ்க்கையை அனுதினமும் பயந்து பயந்து விடிவுகாலம் பிறக்காதா என எண்ணிக்கொண்டு இருக்கும் ஆண்களின் மத்தியில் ஒருவர் 20 திருமணம் செய்துள்ளார்.
தான்சானியாவில் உள்ள எம்சி எர்னாஸ்ட்டோ முகுன்ஜி கபிங்கா என்பவர்தான் தற்போது உலகம் முழுவதும் பேசக் கூடிய நபராக மாறி இருக்கிறார். தான்சானியாவில் சிறிய கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கபிங்கா, 1961 முதல் தற்போது வரை சுமார் 20 திருமணம் செய்துள்ளார். அதில் நான்கு மனைவிகள் உயிரிழந்து விட்ட நிலையில் தற்போது அவருக்கு 16 மனைவிகள் உள்ளனர்.
இதையும் படிங்க: சம்மர் ஆட்டம் ஆரம்பம்... பி அலர்ட் மக்களே!!
அவர்களுக்கு 104 குழந்தைகளும், 144 பேரக் குழந்தைகளும் உள்ளனராம். 1961ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்ய தொடங்கிய இவரிடம் இவரது வம்சத்தை விரிவுபடுத்த நீ எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் அதற்கேற்றார் போல் வரதட்சணை தருவதாக கூறியிருக்கிறார். இதை கேட்ட கபிங்கா, ஏழு சகோதரிகளை திருமணம் செய்து இருக்கிறார். அவரது தந்தை சொன்னது போல் 5 முறை பணம் கொடுத்து இருக்கிறார்.
அதற்குப் பிறகு அடுத்தடுத்து வருடத்திற்கு ஒரு திருமணம் என 20 திருமணம் செய்து இருக்கிறார். அவருக்கு 20 மனைவிகள் இருந்த நிலையில் சிலர் இறந்துவிட்டனர். தற்போது அவருடன் 16 மனைவிகள் வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு கிராமம் போல் காட்சியளிக்கிறது கபிங்காவின் குடும்பம். அனைவருக்கும் தனித்தனியாக வீடு தனி தனி சமையல் என இருந்தாலும் வேலைகளை முடித்த பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது உலகின் மிகப்பெரிய குடும்பங்களின் பட்டியலில் கபிங்காவின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திமுகவினர் பள்ளிகளில் மத்திய அரசின் மும்மொழி பாடத்திட்டம் ஏன்.? கருணாநிதியின் சமச்சீர் கல்விதானே இருக்கணும்.. ஹெச்.ராஜா கிடுக்கிப்பிடி.!