பரபரப்பை ஏற்படுத்திய கொலை... ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!
அதிமுக பிரமுகரை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஆர் ஆர்பி சுரேஷ். இவர் அதிமுக ஜெ. பேரவை ஒன்றிய செயலாளராக இருந்தார். அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசின் ஒப்பந்த பணிகள் செய்வதுடன் பைனான்ஸ் நிறுவனத்தையும் வைத்து நடத்தி வந்தார்.
இதனால் இவருக்கு எதிரிகள் இருந்ததால் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் சுரேஷ் தனது சொந்த ஊரான சேந்தமங்கலம் சென்றிருந்தார். அங்கு அவரை பின் தொடர்ந்து சிலர் சுரேஷை வெட்டி படுகொலை செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் என்பதால் இந்த படுகொலை பரபரப்பானது. போலீசார் விசாரணையில் இறந்த சுரேஷ்க்கு நிலம் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி ஆதரவில் அடாவடி.. நாமக்கல் மேற்கு திமுக ம.செ மதுரா செந்தில் நீக்கம்..!
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த விமர்குமார் வெட்டுக்காட்டை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநரான சிவக்குமாரை கைது செய்தனர். அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு நாமக்கல் மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இருவர் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கைதான விமல்குமாரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் சிவக்குமார் இறந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கைதானவர் என் மகளின் ஆண் நண்பர் இல்லை..! ராகுலுடன் போஸ் கொடுத்த பெண்ணின் தாயார் பேட்டி..!