×
 

5 காங்கிரஸ் தலைவர்களை தோற்கடித்த மன்மோகன் சிங்... எப்படி இந்தியாவின் பிரதமரானார்?

சோனியா இந்த 5 தலைவர்களை விட மன்மோகனை விரும்பினார். இதற்கு என்ன காரணம்?

சோனியா காந்தி பிரதமராக மறுத்த பிறகு பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங், சிவராஜ் பாட்டீல், என்.டி. திவாரி, ப.சிதம்பரம் ஆகியோர் காங்கிரஸிலிருந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். ஆனால் சோனியா இந்த 5 தலைவர்களை விட மன்மோகனை விரும்பினார். இதற்கு என்ன காரணம்?

மே 18ம் ஆண்டு 2004. அடல் பிஹாரி வாஜ்பாய் அரசை தோற்கடித்து காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையப் போகிறது. சோனியா காந்தி பிரதமராவது உறுதி என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது டெல்லி, 10 ஜன்பத்தை அடைந்த ராம்விலாஸ் பாஸ்வானுக்கு சோனியா பிரதமராகவில்லை என்ற தகவல் கிடைத்தது. இந்தச் செய்தியை உறுதிப்படுத்த சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேலை அழைத்தபோது, ​​அவரிடம் இருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை.

ராம் விலாஸ் பாஸ்வான் தனது வாழ்க்கை வரலாற்றில், ‘‘நான் 10 ஜன்பத்தில் இருந்து வெளியே வந்தவுடன், இந்த செய்தி ஊடகங்களில் ஒளிரத் தொடங்கியது. இப்போது யார் பிரதமராக வருவார் என்று கூட்டணி கட்சியினராகிய நாங்கள் ஆச்சரியப்பட்டோம். ஆனால் விரைவில் காங்கிரஸ் இதைத் தெரிவித்தது. எங்களுக்கு முன் வந்த பெயர்கள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தன. அந்த பெயர் மன்மோகன் சிங்.

இதையும் படிங்க: மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம்

2004ல் சோனியா காந்தி பிரதமராக மறுத்ததை அடுத்து, மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. அப்போது ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர் கட்சித் தலைவராக  இருந்தார் மன்மோகன். அப்போதைய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், மன்மோகன் பிரதமராக வருவார் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சோனியா மறுத்ததையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 தலைவர்கள் பிரதமர் பட்டியலில் இருந்தனர். சோனியா காந்தி ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை என்று  இப்போதும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால் சோனியா மறுத்ததை அடுத்து, காங்கிரஸின் அரசியல் வட்டாரங்களில் 5 தலைவர்களில் ஒருவர்  பிரதமராகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், என்.டி.திவாரி, சிவராஜ் பாட்டீல், ப.சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் முக்கியமாக இடம் பெற்றன.

பிரணாப் முகர்ஜி, காங்கிரஸின் மூத்த தலைவர். இந்திரா காந்தி காலத்தில் இருந்தே மத்திய அமைச்சர் பதவிகளை வகித்து வந்தார். பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அவர் இந்த பிரதமராக  வேண்டும் என்று விரும்பினர். ஆனால் பிரணாப் பிரதமராக முடியவில்லை. பிரதமர் ஆகாததற்கு பிரணாப் பலமுறை வருத்தம் தெரிவித்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். மன்மோகன் அரசில் நிதி, பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் பிரணாப்.

அர்ஜுன் சிங், நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். ராஜீவ், சோனியா காந்தியுடன் சிறந்த உறவை கொண்டிருந்தார். மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், கூட்டணி கட்சிகளின் விருப்பமான தலைவராகவும் இருந்தார். பின்னர் மன்மோகன் அரசில் கல்வி அமைச்சராக அர்ஜுன் சிங் நியமிக்கப்பட்டார்.

என்.டி.திவாரி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் முதல்வராக பதவி வகித்தவர். அவரும் பிரதமர் பதவிக்கு முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். திவாரி காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தவர். ஆனால், திவாரியால் பிரதமர் பதவியை பெற முடியவில்லை.

சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிராவின் சக்திவாய்ந்த தலைவர். அதனால், அவரும் பிரதமருக்கான முக்கிய போட்டியாளராக இருந்தார். மும்பை பொருளாதாரத்தின் மையமாக கருதப்படுகிறது. மும்பையில் பாட்டீலுக்கு வலுவான பிடி இருந்தது. பின்னர் மன்மோகன் சிங் ஆட்சியில் பாட்டீல் உள்துறை அமைச்சரானார்.

தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ப.சிதம்பரமும் பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளராக இருந்தார். தென்னிலங்கைக்கு உதவ காங்கிரஸ் சிதம்பரத்தை பிரதமராக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது. சிதம்பரம் காங்கிரஸ் ஆட்சிகளில் பலமுற்ஐ அமைச்சராக இருந்துள்ளார். சிதம்பரம், மன்மோகன் ஆட்சியில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.

மன்மோகன் பிரதமராக வருவதற்கு 3 முக்கிய காரணங்கள் அவருக்கு சாதகமான இருந்தன. முதல் காரணம், மன்மோகன் சிங் உட்கட்சி பூசலில் ஈடுபடாதவர். அப்போது காங்கிரஸில் தெற்கு, வடக்கு என பல கோஷ்டிகளும் செயல்பட்டன. நரசிம்மராவ் ஆட்சியில் ஏற்பட்ட இந்த கோஷ்டி பூசல் காரணமாக காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. சோனியா மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

மன்மோகன் சிங் அரசியல் தனித்து இயங்கியதில்லை. அதுவும் அவருக்கு சாதகமாக அமைந்தது. ராகுல் காந்தி 2004ல் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியினர் அவருக்காக அரசியல் சாணக்கியத்தை தயார் செய்து கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட நிலையில், மன்மோகனைத் தவிர வேறு எந்த அரசியல் பிரமுகருக்கும் பிரதமர் பதவி வழங்கப்பட்டிருந்தால், ராகுலுக்கு எதிர்காலம் எளிதாக இருந்திருக்காது.

மூன்றாவது காரணம், மன்மோகனின் செயல்பாடுகள். மன்மோகன் நிதி அமைச்சராக இருந்தபோது இந்தியாவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்தார். 2004ல் கூட, பொருளாதாரக் கொள்கை, வேலைவாய்ப்பு தொடர்பான பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது. அதை நிறைவேற்ற தொலைநோக்கு தலைவர் தேவை. இதில் மன்மோகன் தான் டாப்பர் என்பதை நிரூபித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் பார்வை ஆர் எஸ் எஸ் பார்வை..எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share