×
 

இந்தியாவிடம் வெள்ளைகொடி காட்டிய கனடா… மார்க் கார்னி சூப்பர் மூவ்!!

இந்தியாவுடன் கனடாவில் வர்த்தக உறவை மேம்படுத்த விரும்புவதாக பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கியர்கள் இரண்டாவது பெரிய சமூகமாக திகழ்கின்றனர். அவர்களின் ஆதரவை பெற ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளித்தார். தொடர்ந்து சீக்கியர்கள் ஆதரவுடன் 2021 தேர்தலில் ட்ரூடோ பெரு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு இந்தியா தான் காரணம் என கனட நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குற்றம்சாட்டினார்.

இதனை நிராகரித்த இந்தியா, கனடாவில் இருக்கும் தனது பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தது. இதேபோல் கனடாவும் தனது பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானிய இயக்கத்தை ஆதரித்து, கனடாவில் வாழும் சீக்கியர்கள் வன்முறையை தூண்டிவருவதாக இந்தியா நம்புகிறது. இது தான் இரு நாட்டுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: கனடாவில் 400 கிலோ தங்கம் ரூ.137 கோடி கொள்ளை… இந்தியாவுக்கு தப்பிய சிம்ரன் வீட்டில் ED சோதனை..!

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கனடா - இந்தியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கனட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். இந்த நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்க உள்ளார். 59 வயதாகும் மார்க் கார்னி, லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும் கனடாவின் 24 ஆவது பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கனடா பொருளாதார நிதி சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் கனட வங்கியில் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கனட வங்கியில் ஆளுநராகவும் 7 ஆண்டுகள் நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் இருந்திருக்கிறார்.

லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், இந்திய கனடா உறவு மோசமடைந்த நிலையில் அதனை மீண்டும் கட்டி எழுப்ப விரும்புவதாகவும், இந்தியாவுடன் கனடாவில் வர்த்தக உறவை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவுடனான வணிக உறவை மேம்படுத்த வேண்டும். நான் பிரதமராக பதவியேற்கும் போது இந்தியவுடனான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்.. தலைகீழாக தொங்கிய பயணிகள்.. நிவாரணம் அறிவித்த விமான நிறுவனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share