×
 

மெகுல் சோக்ஸிக்கு விழுப்புரத்தில் சொத்து..! பெல்ஜியம் அரசிடம் இந்தியா அக்டோபரிலேயே கோரிக்கை..!

வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை அதிகாரிகள் முறைப்படி பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை அதிகாரிகள் முறைப்படி பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் கைது செய்துள்ளனர். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் இந்திய அதிகாரிகள் இறங்கியுள்ளனர். மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திலேயே ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மெகுல் சோக்ஸி தற்போது ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தை நாட இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ரூ.13,500 மோசடி... நாடு தப்பிய மெஹுல் சோக்ஸிக்கு பெல்ஜியத்தில் வைக்கப்பட்ட பொறி… சிக்கியது எப்படி..?

மெகுல் சோக்ஸியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில் “மெகுல் சோக்ஸி ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கைது செய்வதில் இருந்து விலக்கும், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கோரி நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். இந்தியாவுக்கு சென்றால் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கலாம் என்பதால் பெல்ஜியத்தில் விசாரணையை நடத்த அனுமதிக்கும்படி கேட்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மெகுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பது உறுதியானவுடனே கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்திற்கிடையே இந்திய அதிகாரிகள் மெகுல் சோக்ஸியை இந்தியா அழைத்து வரும் கோரிக்கையை பெல்ஜியம் அரசிடம் வைத்துள்ளனர்.

பெல்ஜியம் அதிகாரி ஒருவர் கூறுகையில் “கடந்த 2024 ஜூலை மாத்ம, புரூசெல்ஸில் உள்ள தேசிய புலனாய்வு மையத்துக்கு மெகுல் சோக்ஸியை நாடு கடத்தும் தகவல் குறித்து இந்திய அதிகாரிகள் கேட்டனர். மெகுல் சோக்ஸி அப்போது உடல்நலமில்லாமல் சிகிச்சையில் இருந்தார். இதை உறுதி செய்தவுடன் மெகுல் சோக்ஸி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அனுப்பி வைத்து, இந்திய அதிகாரிகள் பணியைத் தொடங்கினர்.

இந்திய சிபிஐ, இந்திய அரசு, பெல்ஜியம் அரசு ஆகியவை கலந்து பேசி, முறைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோக்ஸியை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். மெகுல் சோக்ஸி நாட்டைவிட்டு தப்பியதும், அவரின் ரூ.2566 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். மெகுல் சோக்ஸியின் ரூ.1600 கோடி மதிப்புள்ள 105 அசையா சொத்துக்கள், பிளாட்கள், அலுவலகங்கள், நிலங்கள், வர்த்தகக் கட்டிடங்கள், மும்பையில் தொழிற்சாலை, ராய்காட், மகாராஷ்டிராவின் நாக்பூர், கொல்கத்தா, சூரத், தமிழகத்தில் விழுப்புரம் ரங்காரெட்டி,ஆகியவற்றில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இது தவிர ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, அமெரிக்கா, ஜப்பானில் ரூ.85 கோடி சொத்துக்கள், இந்தியா முழுவதும் 136 இடங்களில் ரூ.598 கோடிக்கு அசையும் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.

மெகுல் சோக்ஸி நடத்திய கீதாஞ்சலி ஜெம்ஸ் வைர நிறுவனம் போலியான கடிதத்தை அளித்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2014 முதல் 2017ம் ஆண்டுகளுக்கு இடையே ரூ.6097 கோடி கடன் பெற்றது. இது தொடர்பாக நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கப்பிரிவு பலமுறை சம்மன் அனுப்பியும் மெகுல் சோக்ஸி ஆஜராகவில்லை இதனால் ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. அமலாக்கப்பிரிவு கோரிக்கையைத் தொடர்ந்து மெகுல் சோக்ஸியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, உள்நாட்டில் கடன் பெற்று திருப்பிச்ச செலுத்த முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர் மெகுல் சோக்ஸி என 2018, ஜூலை 10ம் தேதி அமலாக்கப்பிரிவு அறிவித்தது. 

இதையும் படிங்க: ரூ.13,500 மோசடி... நாடு தப்பிய மெஹுல் சோக்ஸிக்கு பெல்ஜியத்தில் வைக்கப்பட்ட பொறி… சிக்கியது எப்படி..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share