ரூ. 20 லட்சம் வழிப்பறி.. வருமானவரித்துறை அதிகாரிகள் ஜாமின் மனு தள்ளுபடி..
ஆயிரம் விளக்கில் பகுதியில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் சன்னிலாய்டு தவிர மற்ற 4 பேருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் சன்னிலாய்டுவிடம் நீதிமன்ற உத்தரவில் காவல்துறை விசாரணை செய்ததில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உற்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11தேதி கொண்டு வந்த பணம் 40 லட்சம் பிரித்து பின்னர் 20 லட்சம் ரூபாய் திரும்ப அளித்தவிட்டு மீதாம் இருந்த 20 லட்சம் வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இந்த குற்றத்தில் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு, வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் , பாபு ஆகியோர்க்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்து அவர்களுக்கு எதிராக மிரட்டல், பொது ஊழியர் கடமை தவறி செயல்படுதல், நேர்மையற்ற முறையில் பிறர் சொத்துகளை அபகரித்தல், தகவலை மறைத்தல், அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.
இதையும் படிங்க: கிண்டி ரேஸ்கிளப் கோல்ப் மைதானத்தில் குளம்.. தடைகோரிய மனு தள்ளுபடி..
ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்த வழக்கில் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி , வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் பிரபு ஆகிய மூன்று பேர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், எந்த ஆதாரம் இல்லாமல் வழக்கு பதிவு செய்து கைது செய்யபட்டுள்ளது. எனவும், இதே போன்று வேறு வழக்கில் மனுதரார்களுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.
காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர், தேவராஜன், இந்த வழக்கின் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. இந்த காவல்துறை, வருமானவரி துறை, வணிக வரிதுறை அதிகாரிகள் தொடர்பு உள்ளது எனவே முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் காவல்துறை அதிகாரி சன்னிலாய்டு ஒப்புதல் வாக்குமூலத்தில் 20 லட்சம் ரூபாய் தொகையை குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி தற்போதைய நிலையில் மனுதரார்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது. இவர்களிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டும் என்ற வாதங்களை ஏற்று மூன்று பேரின் ஜாமீன் மனுகளை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உங்க இஷ்டத்துக்கு கட்டுவீங்களா?... இடித்துத் தள்ள உத்தரவிட்ட நீதிமன்றம்...