கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம்... நேரில் வந்து அசிங்கப்பட்ட அமைச்சர் பொன்முடி..!
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த எல்.கே.ஜி.மாணவியின் குடும்பத்திடம் வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கிய நிவாரணத் தொகைக்கான செக்கை, உறவினர்கள் அவரிடமே தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவரையும் நள்ளிரவு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்தனர்.
அதன் பின்னர் குற்றவாளிகள் மூவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை காலை செய்யப்பட்டு உடல் பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !
வீட்டில் வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தையின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். அதன் பின்பு குழந்தையின் தாயிடம் முதலமைச்சர் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது குழந்தையின் தாயார் காசோலையை வாங்க மறுத்து கதறி அழுததால் அதனை குழந்தையிம் தாத்தா பெற்று கொண்டு குழந்தையின் தாயாரிடம் ஒப்படைத்தார். அதனை வாங்கக்கூடாது என சுற்றியிருந்த உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, குழந்தையின் தாய் கையில் இருந்த காசோலையைப் பிடுங்கி அமைச்சர் மீதே தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !