மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!!
தமிழ்நாடு, இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், 2023-24 நிதியாண்டில், 11 மாதங்களில் மட்டும், தமிழகம் 12.62 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.05 லட்சம் கோடி) மதிப்புள்ள மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்து புதிய சாதனையை எட்டியுள்ளதாக வர்த்தக போர்ட்டல் NIRYAT (National Import-Export Record for Yearly Analysis of Trade) தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 34.02 பில்லியன் டாலர் மதிப்பில் தமிழ்நாடு 37.09% பங்கைக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, 2027-28க்குள் ஆண்டுதோறும் 20-22 பில்லியன் டாலர் (ரூ1.6 - ரூ1.8 லட்சம் கோடி) மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை அடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டின் பிப்ரவரி மாதம் வரை 12.6 பில்லியன் டாலர் என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கருவி ஏற்றுமதி... டி.ஆர்.பி. ராஜா சொன்ன குட் நியூஸ்!!
நாங்கள், இப்போது அதிக மதிப்புள்ள மின்னணு கூறுகளை உற்பத்தி செய்வதில் விரைவாக முன்னேறி வருகிறோம் என்றும் மேலும், தமிழ்நாடு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக மட்டுமல்லாமல், உயர் மதிப்புள்ள மின்னணு உற்பத்திக்கும் மையமாக மாறி வருகிறது. மார்ச் 31, 2024 முடிவடைந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்) மற்றும் உத்தரப் பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகியவற்றை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இதுமட்டுமல்லாமல், இந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2023 - மார்ச் 2024) தமிழ்நாடு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி, கர்நாடகா 6.88 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும், உத்தரப் பிரதேசம் 4.69 பில்லியன் டாலருடன் 3வது இடத்திலும் உள்ளது. நாங்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இது மாநிலத்தில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
தமிழ்நாடு குறைந்த மதிப்புள்ள உற்பத்தி மற்றும் செயலியக்கத்தை ஏற்கனவே முழுமையாக கைப்பற்றியுள்ளது என்றும் "மற்ற மாநிலங்கள் தற்போதுதான் மின்னணு உற்பத்தி சூழலுக்கு நுழைந்து, அதிக அளவிலான ஊக்குவிப்புகளால் நிறுவனங்களை ஈர்க்க முயற்சிக்கின்றன. ஆனால், தமிழ்நாடு தனது ஊக்குவிப்புகளை semiconductor மற்றும் மற்றும் மேம்பட்ட மின்னணு கூறு உற்பத்தியாளர்களை நோக்கி, உயர்தர வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வழியில் செல்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வரைபடத்திற்கு ரூ.8 கோடியா? சர்ச்சையில் சிக்கிய பிரபல கோவில்!!