×
 

பிரதமர் மோடிக்கு மிக உயரிய ‘மித்ரா விபூஷனா’ விருது: இலங்கை அரசு கெளரவம்..!

பிரதமர் மோடிக்கு மிக உயரிய 'மித்ரா விபூஷனா' விருது வழங்கி கௌரவித்துள்ளது இலங்கை அரசு.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக உயரிய “ மித்ரா விபூஷனா” விருது வழங்கி இலங்கை அரசு இன்று கெளரவித்தது. இந்த “மித்ரா விபூஷனா” விருது இலங்கையில் உள்ள குடிமக்களுக்குத் தரப்படும் மிக உயரிய விருதாகும்.  இந்தியா-இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், உறவைப் போற்றும் வகையில் இந்த விருதை இலங்கை அதிபர் அனுரா குமாரா திசநாயகே பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார்.

இந்த மித்ரா விபூஷனா விருதை கடந்த 2008ம் ஆண்டு அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே அறிமுகம் செய்தார். இந்த விருது என்பது இலங்கை அரசுடன் நட்புறோடு இருக்கும் நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகளுக்கு இலங்கை அரசால் தரப்படும் உயரிய விருதாகும்.

இதையும் படிங்க: 10 எஸ்.பி., 15 டிஐஜி... ஹை அலர்ட்டில் ராமேஸ்வரம்... பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? 

இலங்கைக்கு அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில் 1.40 கோடி மக்களின் சார்பில் இந்த விருதை பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் அனுரா குமாரா திசநாயகே வழங்கினார். 2019ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கைக்கு பெரும் ஆதரவாக இருந்து, ஏராளமான உதவிகளை இந்தியா செய்தது, இதற்கு நன்றி செலுத்தி கவுரவிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு இந்த விருதை இலங்கை அரசு வழங்கியது.

6.5 செ.மீ அகண்ட ரிப்பனில் பொருத்தப்பட்ட மித்ரா விபூஷனா பதக்கம், இரு நாடுகளின் நட்புறவை வெளிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இந்த வெள்ளி பதக்கத்தில் இலங்கையின் நவரத்தினங்கள் பொறிக்கப்பட்டு, தாமரை, பூமி, சூரியன், நிலா, நெல்மணிகள் ஆகியவற்றின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த டாலரில் உள்ள தர்மசக்கரம், பெளத்த மதத்தின் பாரம்பரியத்தையும், புன்னிய கலசம் என்பது செழிப்பையும், வளர்ச்சியையும், சூரியன், நிலவு என்பது, எதிர்காலத்திலும், காலநேரமின்றி நட்புறவோடு இருக்கவும் குறிப்பிடுகிறது. இந்த விருது யாருக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து அதிபர் மாளிகையில் உள்ள குறிப்பேட்டில் பொறிக்கப்படும்.

பிரதமர் மோடிக்கு இந்த மித்ரா விபூஷனா விருதை வழங்க இலங்கை அதிபர் குமாரா திசநாயகே நினைத்ததற்கு இரு நாடுகளின் நட்புறவும், தனிப்பட்ட நட்புறவும் மட்டும் காரணமல்ல, இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் பாரம்பரிய கலாச்சார, ஆன்மீக உறவுகளும் காரணமாகும். இந்திய தேசத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு, அளிக்கப்பட்ட இந்த அங்கீகாரம், இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தி, பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும்.

இதையும் படிங்க: காங். குரல் டெல்லியில் எதிரொலிக்கணும்..! பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்.. செல்வபெருந்தகை தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share