முதலமைச்சர் ஸ்டாலினுடன் எம்.ஏ.பேபி சந்திப்பு..! புதிதாக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வர்..!
சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.பேபி முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் அவர் தேர்வு செய்யப்பட்டார். 1987 முதல் 1991 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர், இளம் வயதிலேயே மாநிலங்களவை உறுப்பினரானவர்களில் ஒருவராக அறியப்படுபவர்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். புதிதாக கட்சி பொறுப்பேற்றுள்ள அவருக்கு முதலமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: மேடையில் துரை வைகோ.. இறுதி சீட்டில் மல்லை சத்யா.. நிர்வாகக்குழு கூட்டத்தில் நடப்பது என்ன?
இந்த சந்திப்பை தொடர்ந்து பேசிய எம்.ஏ.பேபி, தமிழ்நாட்டில் அதிமுக பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். திமுக கூட்டணி வலுவாக இருப்பதால் மதவாத சக்திகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடிய வில்லை என்றும் சிறுபான்மையினர் மீதான மத்திய அரசின் தாக்குதலுக்கு வக்ஃபு மசோதாவே ஒரு சான்று எனவும் தெரிவித்தார். ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஸ்வகர்மாவை விட கலைஞர் கைவினை திட்டத்தில் கூடுதலாக 25 தொழில்கள்..! முதலமைச்சர் பெருமிதம்..!