அப்பா.. அப்பா.. என்ற அந்த வார்த்தை..! மனம் மகிழ்ந்து மகளிர் தின வாழ்த்து சொன்ன முதலமைச்சர்..!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்!
மேலும், மகளிருக்காக தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். மகளிர் உரிமைத்தொகையை தாய் வீட்டு சீர் என என் இனிய சகோதரிகள் மனம் மகிழ கூறுவது தான் விடியலின் ஆட்சி என நெகிழ்ந்து கூறியுள்ளார்.
தான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் கையெடுத்து மகளிருக்கான விடியல் பயணம் தான் என பேசி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விடியல் பயணம் மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது என தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் படித்த பல பெண் பிள்ளைகள் கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலையில், உயர்கல்வி பெரும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மாணவிகள் தன்னை அப்பா, அப்பா என வாய் நிறைய அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த பாச உணர்வு தான் முக்கியம் எனவும் அன்பு சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவே இல்லை.. ஸ்டாலின் ஆக்ஷனுக்கு சந்திரபாபு ரியாக்ஷன்.!