×
 

"மகா கும்ப மேளாவின் மோனாலிசா" : அலங்கார மாலைகள் விற்கும் "16 வயது அழகு தேவதை"யின் 'வீடியோ வைரல்'

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா, உலக அளவில் பக்தர்களை வசீகரித்து வருகிறது.

கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவதுடன், விழாவின் பக்கவாட்டு கோணங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் ஒவ்வொரு விழாவிலும் அரங்கேறுவது உண்டு. 

அதன்படி இந்த ஆண்டு நடைபெறும் விழாவில், வண்ணமயமான அலங்கார மணி மாலைகள் பூமாலைகள் விற்கும் 16 வயது அழகு தேவதை ஒருவர் அனைவரையும் வசீகரித்து வருகிறார். 

இந்தூரைச் சேர்ந்த அந்த தேவதையின் பெயர் மோனாலிசா.. ஆம் அழகோவியம் மோனாலிசாவின் பெயரே தான்.

மங்கலான நிறம் மற்றும் கவர்ந்திழுக்கும் வசீகரஅம்பர் கண்கள் கொண்ட இந்த பெண் பேசுவதே ஒரு தனி பாணியாக உள்ளது. 

இதையும் படிங்க: ரூ.6 கோடி நகைகள் அணிந்து, "மகா கும்பமேளா' பக்தர்களைக் கவரும் தங்கச் சாமியார் ; இதுவரை 8 கோடி பேர் புனித நீராடல்

மேலும் 'இன்ஸ்டா' சமூக ஊடகத்தில் வருகின்ற 'ரீல்'களை பார்க்கும் போது பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்களை அவர் மிகவும் கவர்ந்து இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. 

சிவம் பிகானெரி அபிஷியல் என்ற கணக்கில், ஒரு ரீல் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளுடன் மிக அதிக அளவில் வைரல் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

'யூடியூபர்' ஒருவர் " நீ எங்கிருந்து வருகிறாய்? உன்னிடம் சமூக ஊடக கணக்குகள் உள்ளதா!? என்று கேட்பதையும் பார்க்க முடிகிறது. இதற்கு அந்த மங்கையின் பதில் மூலம் சமூக ஊடகங்களில் அவர் பிரபலமாக இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது . 

மற்றொரு ரீலில், இளைஞர் ஒருவர் மோனாலிசாவிடம் "உனக்கு திருமணம் ஆகி விட்டதா?' என்று கேட்கிறார். அதற்கு அவருடைய பதில் ..."16 வயது தானே ஆகிறது...இது ஒன்றும் திருமண வயது இல்லையே?" என்றும் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக பதில் அளிக்கிறார். 

"யூட்யூபில் உங்களை பின் தொடர்பவர்களில் யாரையாவது நீங்கள் விரும்புகிறீர்களா?" என்ற கேள்விக்கு, "அவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள்".. என்ற சாதுரியமான பதில் உச்சம். "பெற்றோர் தனக்காக தேர்ந்தெடுக்கும் ஒருவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்" என்ற பதிலும் சிறப்பு. 

மோனாலிசாவின் இந்த திடீர் புகழுக்கு சுவாரசியமான எதிர் விளைவுகளும் தலை காட்டுகின்றன. "இயற்கை அழகு" என்று பலர் பாராட்டினாலும், சிலர் ப புனித யாத்திரைக்கான இடத்தில் அவருடைய *காந்தக் கண்*களின் 'ஆண் பார்வை'யை விமர்சித்தனர்.

மற்றொரு வீடியோவில், மோனோலிசாவுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு கொடுக்க ஒருவர் விரும்புவதையும், அதை மோனாலிசா ஏற்க மறுப்பதையும் பார்க்க முடிகிறது.

 தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு, தனது மாலைகளில் ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆயிரம் ரூபாயை மனோலிசா ஏற்றுக் கொள்கிறார்.

மோனோலிசாவின் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் ஏராளமான தொடர்பாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை படிக்கும் போதே .. நாமும் ஒரு முறை மகா கும்பமேளாவிற்கு சென்று இந்த மோனாலிசாவை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா!?

இதையும் படிங்க: கும்ப மேளாவுக்கு வந்த ‘ஐஐடி பாபா’! மும்பையில் ஏரோ ஸ்பேஸ் படித்து துறவியானவரின் கதை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share