எடப்பாடியாருடன் மோதல்... 'என் லட்சியம் உயரமானது': செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..!
சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்து விட மாட்டேன். நான் போகும்பாதை சரியானது, முறையானது.
நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்.. சீமானை போல் பேச முடியாது.. அளந்து பேச வேண்டிய சூழலில் இருக்கிறேன் என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒருவிழாவில் பேசிய அவர், ''இக்கட்டான சூழலில் சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. எந்தப்பாஅதை சரியாக இருக்கிறதோ அந்தப்பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறேன். என் லட்சியம் உயரமானது. என்றாலும் சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்து விட மாட்டேன். நான் போகும்பாதை சரியானது, முறையானது.
சிறந்த பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். உக்ரைன் போரை சுமூகமாக தீர்க்க மோடி உதவியதாக புடினே நன்றிகூருகிறார். கொரோனா காலத்தில் இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில், இலவசமாக தடுப்பூசி கொடுத்துள்ளார் மோடி'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு டூ ஜெயலலிதா சமாதி..! எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி.. தர்மயுத்தத்திற்கு தயாராகும் செங்கோட்டையன்..?
நான் இப்போது எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் உணர முடியாது. இங்கே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் பேசுவதைப் போல என்னால் பேச இயலாது. அவர் ஒரு கட்சியின் தலைவர். எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், நான் அளந்துதான் பேச வேண்டியது இருக்கிறது. கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். ஒரு வார்த்தை தவறி விட்டால் என்ன வரப்போகிறது என்கிற தொலைக்காட்சிகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நான் அறிவேன்.
உள்ளே நுழைந்த உடனே எனக்கு இரண்டே இரண்டு கேள்விகள் கேட்டார்கள். நீங்கள் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் எதற்காக அவரை சந்தித்தீர்கள் என்று கேட்டார்கள். அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆறு பேரும் அங்கே சென்றோம். எனக்கு இன்றைக்கு தேவை என்னவென்றால் என்னுடைய பகுதியிலே இருக்கிற மக்களுடைய நலன் கருதி இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் பவானி ஆற்றங்கரை ஓரத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வகையில் ஒரு சாயப்பட்டறை கொண்டு வருகிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று என்னிடத்திலே ஒரு 200க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்தார்கள்.
அந்த மனுவை பெற்றுக்கொண்டு சபாநாயகரியிடம் சென்று இதில் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொடுப்பதற்காகப் போய் சந்தித்தேன். அதுவே பெரிய விஷயமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முக்கியமான சூழலில் உங்களிடம் நின்று கொண்டிருக்கிறேன். இங்கு இருக்கிற நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறினார்கள்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபாநாயகரை தனியே சந்தித்த செங்கோட்டையன்... இபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்தலா?