இனி நிலாவுல ஃபோன் பேசலாம்... கனெக்ஷன் கொடுத்த நோக்கியா!!
அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலாவுக்கு இணைய சேவை வழங்கும் முயற்சியில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அதானா லேண்டர் என்ற விண்கலத்தை நிலவில் ஏவியுள்ளது.
இதுக்கு இல்லையா ஒரு எண்ட் என்ற அளவுக்கு டெக்னாலஜியின் வளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இணையத்தின் சேவை உலகமெங்கும் பரந்து விரிந்துள்ளது.
இந்த நிலையில் மண்ணுலம் மட்டும் போதாது விண்ணுலகிலும் நாங்கள் தான் கெத்து என்ற அளவுக்கு இண்டர்நெட் சேவை நிலாவுக்கு போகுது. கம்யூனிகேஷன் டெக்னாலஜியை நிலாவிலும் விரிவுப்படுத்த நிலைத்த நாசா அதுக்கான வேலையில் படுவேகமாக செயல்படுவதாக தெரிகிறது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலாவுக்கு இணைய சேவை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அதானா லேண்டர் என்ற விண்கலத்தை நிலவில் ஏவியுள்ளது. இந்த மிஷனுக்கு IM-2 என பெயர் வைத்துள்ளனர். நிலவில் மொபைல்ச் ஏவை வழங்கும் விதமாக உருவாக்கபப்ட்ட லேண்டர் கடந்த புதன்கிழமை காலை 7 மணியளவில் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஏவியுள்ளது.
அதேனா லாண்டரை ஃபால்கன் -9 ராக்கெட் விண்ணில் எடுத்து சென்றுள்ளது.
இதையும் படிங்க: பூமியை நோக்கி வேகமாக வரும் 'சிட்டி டெஸ்ட்ராயர்' விண்கல்... வழியிலேயே தாக்கி அழிக்க "நாசா" திட்டம்..!
இந்த ராக்கெட் நிலவின் தென் துருவப்பகுதிக்கு சென்று அங்கு இணைய சேவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக நோக்கியா நிறுவனம் நோக்கியா பெல் லேப்ஸ் என்ற முதல் செல்லுலார் நெட்வொர்க்கை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
நிலவில் ஆய்வு செய்யப்பட்டும் மொபைல் நெட்வொர்க் விண்வெளியில் இருக்கும் வீரர்களுடன் பேச எளிதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் நிலவில் மேற்கொள்ளப்படும் நெட்வொர்க் ஆய்வு குறித்தும் நாசா விளக்கியுள்ளது.
அதாவது, நோக்கியா வெப்சைட்டில் இருக்கும் டேட்டாபடி, நோக்கியா நெட்வொர்க் LSCS 4G ஸ்பீட்ல (4G/LTE) இன்டர்நெட் நிலவில் கிடைக்கும் படி வடிவமைக்கபப்ட்டுள்ளது. நிலாவோட தெற்குப் பகுதியில் லேண்டர் இறங்கியதும் நோக்கியா LSCS ஆக்டிவ் ஆகி, இன்டியூட்டிவ் மெஷின் டைரக்ட்-டு-எர்த் லிங்க் மூலம் LSCS சாஃப்ட்வேரை ஆக்டிவாகும். பின்னர், 'நெட்வொர்க் இன் எ பாக்ஸ்' (NIB) ஆக்டிவ் ஆகி அங்கிருந்து நோக்கியாவின் மிஷன் கண்ட்ரோல் சென்டருக்கு டேட்டா அனுப்பும்.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால் விண்வெளி ஆய்வில் மற்றுமொரு மைல்கல் சாதனையை நாசா படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: நிலவில் இறங்கியது ‘ப்ளூ கோஸ்ட்’ விண்கலம்! அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் மைல்கல்