×
 

வியக்க வைக்கும் புதிய பாம்பன் பாலம்.. ஒரு பொறியியல் அதிசயம்.. ரயில்வே அமைச்சர் புகழாரம்.!!

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் பாலம் ஒரு பொறியியல் அற்புதம், அதிசயம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புகழாரம் சூட்டினார்.

பாம்பனையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் கடல் வழியாக இணைக்கும் புதிய பாம்பன் பாலம் ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையொட்டி நடைபெற்ற அரசு விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று பேசினார். “இன்று ராம நவமி. இதே நாளில் தான் பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் பாலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இந்த நாள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நமது நினைவுகளில் அப்படியே இருக்கும்.

இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றும் பயணத்தில் இது முக்கியமான ஒரு மைல் கல்லாக இந்தப் பாலம் அமைந்துள்ளது.
பாம்பன் பாலம் ஒரு பொறியியல் அதிசயம். நமது நாட்டில் கடலில் அமைந்துள்ள முதல் செங்குத்து தூக்கு பாலம் இதுதான்.
தமிழ் கலாச்சாரத்தில் பாம்பன் பாலம் ஒரு முத்து போன்றது. பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரத்துக்கும் ம் மொழிக்கும் அதிக முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்..!

தமிழகத்தில் ராமேஸ்வரம் உட்பட 77 ரயில் நிலையங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் அழகான வகையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பரில் இதன் பணிகள் முடிந்து விடும். ரயில்வே துறை சார்ந்து பல்வேறு பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. அதே போல புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 8 புதிய வந்தே பாரத் ரயில்களை அளித்துள்ளார் என்பதையும் இங்கே நான் குறிப்பிடுகிறேன்" என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இதையும் படிங்க: பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.. வேட்டி, சட்டையில் அசத்தல் என்ட்ரி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share