×
 

அடுத்த கனடா பிரதமர்: போக்குவரத்து துறை அமைச்சரான தமிழ் பெண் அனிதா ஆனந்த்..!

பல்கலைக்கழக பட்டப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற பேராசிரியர்...

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்துக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் அவர் பல்கலைக்கழக அரசியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றார்.

தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி இருக்கிறார். இந்தியாவுடன் அவர் மேற்கொண்ட மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கனடாவில் அவருடைய செல்வாக்கு சரிந்தது. அத்துடன் ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து பதவி விலகும் முடிவுக்கு அவர் தள்ளப்பட்டார். 

இதையும் படிங்க: "அல்டிமேட் பிக் பாஸ்" : உலகின் வலுவான பிரதமர், நரேந்திர மோடி: பாரதிய ஜனதா பெருமிதம்

அதைத் தொடர்ந்து ஆளும் லிபரர் கட்சி தலைவரும், கனடாவின் புதிய பிரதமரும் வருகிற மார்ச் 24ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ட்ரூடோ அறிவித்திருந்தார்.

கனடாவில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அனிதா ஆனந்துக்கு அந்த நாட்டில் நல்ல செல்வாக்கு உள்ளது. இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்களும் கனடாவில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக மட்டுமல்ல ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும் அனிதா ஆனந்த் தேர்ந்தெடுக்கப்படலாம் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

தாயும் டாக்டர், அனிதா ஆனந்தின் தந்தை டாக்டர் எஸ். வி. ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அனஸ்தீசியா டாக்டர் சரோஜ். அவர்கள் கனடாவுக்கு குடியேறியதைத் தொடர்ந்து கடந்த 1967 ஆம் ஆண்டு ஸ்கோடியா மாநிலத்தில் அனிதா பிறந்தார். 

கனடாவில் அரசியல் பட்டப்படிப்பும் இங்கிலாந்தில் சட்டமும் படித்த அனிதா 1995-ம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. 

போக்குவரத்து துறை அமைச்சர் 

தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வரும் அனிதா ஆனந்திடம் பொது கொள்முதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சீர்திருத்தம் போன்ற முக்கியத்துறைகளிலும் பணிபுரிந்து இருக்கிறார்.

அனிதா ஆனந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பல்வேறு பல்கலைக்கழகங்களில் சட்டத்துறை பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 

படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் 

குயில் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பட்டப் படிப்பில் தங்க பதக்கம் பெற்று சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றவர். 

ட்ரூடோவை அடுத்து பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கும் தலைவர்களின் பட்டியலில் அனிதா ஆனந்தின் பெயர் முன்னிலையில் இருப்பதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கனடாவை உரிமை கொண்டாடும் ட்ரம்ப்..! கிரேட்டர் அமெரிக்க திட்டத்தால் எழும் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share