×
 

விபத்தில் 1.80 லட்சம் பேர் பலி... ஷாக் கொடுத்த மத்திய அமைச்சர்..!!

இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் சுமார் 1,80,000 பேர் உயிரிழப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் சாலை விபத்தின் மரணங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது என்பதை சொல்வதில் தயக்கமில்லை.

சாலை விபத்து எங்கள் துறையில் வெற்றிப்பெறாத ஒரு பகுதி. சிறிய தவறுகள், மோசமான சாலை வடிவமைப்புகளே இந்த விபத்துகள் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளன. இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆண்டுதோறும் 4,80,000 சாலை விபத்துகள் நடைபெறுகிறது. அதில் 1,80,000 பேர் இறக்கின்றனர்.

இதையும் படிங்க: 'சித்திரவதை காத்திருக்கிறது...' இந்தியாவிடம் தப்பிக்க ராணா அமெரிக்காவிடம் போட்ட நாடகம்..!

உலகிலேயே அதிகமாக சாலை விபத்துகளில் இறப்பது இங்குதான் இருக்கும். இறப்பவர்களில் 66 சதவீதத்தினர் 18-45 வயதை சேர்ந்தவர்கள். இதனால் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் இழப்பும் ஏற்படுகிறது. சாலை விபத்துகளில் முக்கிய குற்றவாளிகள் சிவில் இன்சினியர்ஸ் தான். என்னுடைய 10 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன்.

அவர்களால் சில விபத்துகள் ஏற்படுகிறது. சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிறந்த தொழில்நுட்பங்களாளும் நியாயமான கட்டுமான பொருட்களையும் பின்பற்றினால் மட்டுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும். 2030க்குள் 50 சதவீத சாலை விபத்துகளை குறைப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: இந்திய குழந்தைகளை நாடு கடத்தும் டிரம்ப்... உச்சக்கட்ட அதிர்ச்சியில் பெற்றோர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share