×
 

கிறுக்கு வேலைகளில் ஈடுபடும் முதலமைச்சர் நிதிஷ்..! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்..!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கிறுக்கு வேலைகளை கண்டு அம்மாநில எதிர்க்கட்சிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமாரின் சமீபத்திய செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் பொறுப்பு மிக்க முதலமைச்சர் ஒருவர் LKG வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களைப் போல பொது இடங்களில் நடந்து கொள்ளும் குழந்தைத்தனமான கிறுக்கு வேலைகளை கண்டு பீகார் மாநில எதிர்க்கட்சிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளன.

பீகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD), முதலமைச்சர் நிதீஷ் குமாரின் செயல்பாடுகளை கண்டு கடுமையாக சாடி உள்ளது.

இதையும் படிங்க: தேர்தலுக்குப்பிறகு நிதிஷ்குமார் பாஜகவுக்கு மாபெரும் துரோகம் செய்வார்... பி.கே போட்ட அணுகுண்டு..!

பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை அவமதித்து, மாநிலத்திற்கு அவமானம் தேடித் தந்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். பாடலிபுத்திர நகர விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற செபாக்டாக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நிதிஷ் குமார் பேசுவது, சிரிப்பது மற்றும் சைகை செய்வது போன்ற காட்சிகள் வைரலான வீடியோவில் பதிவாகியிருந்தன. இது எதிர்க்கட்சிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பீகார் சட்டமன்றத்திற்கு வெளியே பேசிய RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த சம்பவத்தை “அவமானகரமானது” என்று விமர்சித்தார். “நிதிஷ் குமார் ஒரு மூத்த தலைவர், நாங்கள் அவரை மதிக்கிறோம். ஆனால், அவரது செயல்கள் தேசிய கீதத்தையும் பீகாரின் பெருமையையும் புண்படுத்தியுள்ளன,” என்று அவர் கூறினார்.

RJD தலைவர் லாலு பிரசாத் யாதவ், X தளத்தில், “இந்த அவமானத்தை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. பீகார் வெட்கப்படுகிறது, இனி என்ன மிச்சம்? உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஷ்டிரிய  ஜனதா தள கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன, சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி, நிதிஷுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

அவரது நடத்தை மனநலக் குறைபாட்டை பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டினர். முன்னாள் முதலமைச்சர் ரப்ரி தேவி, அவர் பதவி விலக வேண்டும் என்றும், அவரது மகன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரினார்.

நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) இந்த விமர்சனங்களுக்கு உடனடியாக பதிலடி கொடுத்தது. NDA கூட்டணி தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, “RJD ஆட்சியில் பீகாரின் பெயரை கெடுத்தவர்கள் இப்போது நிதிஷை கேள்வி கேட்கிறார்கள். அவர் தான் மாநிலத்தின் மரியாதையை மீட்டெடுத்தவர்,” என்று பாதுகாத்தார். JD(U) தலைவர்கள் இந்த பிரச்சினையை RJD-யின் தோல்விகளிலிருந்து திசை திருப்பும் சூழ்ச்சி என்று நிராகரித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், அமைச்சரவையின் அமைச்சர் மற்றும் மூத்த தலைவர் ஒருவர்  இது RJD-யின் தோல்விகளை மறைக்கும் தந்திரம், என்று கூறினார். வீடியோவில், நிதிஷ் குமார் தனது முதன்மை செயலாளர் தீபக் குமாருடன் பேசுவதும், அவர் நிதிஷை தாங்கி நிற்க முயல்வதும் பதிவாகியிருந்தது. இது எதிர்க்கட்சியின் “தடுமாறும் தலைவர் என்று வர்ணித்தனர். RJD எம்.பி. மனோஜ் ஜா, “வேறு யாராவது இப்படி செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார். இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 'செல்லத்தை' வழிக்குக் கொண்டு வந்த மோடி..! நிதீஷ் குமார் அரசில் பாஜகவின் 7 புதிய அமைச்சர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share