செக்யூரிட்டியில்லை! வெளிநாடுகளில் படிக்க ரூ.50 லட்சம் வரை கல்விக் கடன்: எஸ்பிஐ அறிவிப்பு பற்றி தெரியுமா...
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்காக ரூ.50 லட்சம்வரை பிணையம்(கொலாட்ரல் செக்யூரிட்டி) இல்லாத கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டம் ஏற்கெனவே இருந்தபோதிலும், பிணையம் இல்லாமல் வெளிநாடுகளில் படிக்கும் செலவுத்தொகைக்கான அளவை எஸ்பிஐ வங்கி சமீபத்தில் அதிகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி எஸ்பிஐ வங்கி பட்டியலிட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள 86 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த கல்விக்கடன் பொருந்தும்.(கல்விநிறுவனங்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது)
இந்த கல்விக்கடன் திட்டத்தின் அம்சங்கள்
பிணையம் இல்லாக் கடன்
இந்த எஸ்பிஐ எட்-அட்வான்டேஜ் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு பிணையம் இன்றி ரூ.50 லட்சம் வரை கல்விக்கடன் தரப்படுகிறது.
இதையும் படிங்க: போராட்டத்தில் கோல்மால்... திமுகவை ஜெயிக்க வைத்தவரை பிதுக்கிய நீதிமன்றம்... ஜெயிலுக்குப்போகும் பி.கே..!
கடனை திருப்பிச் செலுத்தும் காலம்
கல்விக் கடன் வாங்கியவர்கள் கடனை 15 ஆண்டுகளுக்குள் திருப்புச் செலுத்தலாம். மாணவர்கள் இஎம்ஐ மூலம் எளிதாகக் கடனை திருப்பிச் செலுத்தும் வசதியையும் வங்கி உருவாக்கியுள்ளது.
விரைவான கடன் வழங்கல்
கல்விக்கடன் என்றாலே பல்வேறு ஆவணச் சரிபார்ப்பு, அலையவிடுதல், பாதுகாப்புப் பத்திரம் என்ற கேள்விகள் எழும். ஆனால், இந்தத் திட்டத்தில் மாணவர்கள் விசா பெறுவதற்கு முன்பாகவே அல்லது ஃபார்ம்1-20 பெறுவதற்கு முன்பாகவே கிடைத்துவிடும்.
வரிச் சலுகைகள்
வருமானவரிச் சட்டத்தின்படி மாணவர்கள் 80(இ) பிரிவின்படி வரிச்சலுகைகள் பெறலாம். இதன்படி கல்விக்கடனுக்காக திருப்பிச் செலுத்தும் வட்டித் தொகையில் தள்ளுபடி பெறலாம்.
பாடப்பிரிவுகள்
இந்த கல்விக்கடன் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, முனைவர் பட்டம் பெறுதல் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகிறது.
கல்விக்கடனில் அடங்கும் பிரிவுகள்
கல்விக்கடன் பெறும் போது, அதில் மாணவர்களின் முக்கியச் செலவுகளான டியூஷன் கட்டணம்,விடுதி கட்டணம், தேர்வுக் கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வுக்கூடம் கட்டணம், போக்குவரத்து செலவுகள், புத்தகச் செலவுகள், கருவிகள், பொருட்கள், கணினி, ப்ராஜெக்ட் ஒர்க், தீதிஸ் ஆகியவை அடங்கும்.இது தவிர கல்விச்சுற்றுலா ஆகியவற்றுக்கு டியூஷன் தொகையில் 20 சதவீதம் வரை தரப்படும். காஷன் டெபாசிட், ரீபண்ட் டெபாசிட் ஆகியவற்றுக்கு 10% வரை தரப்படும்.
வட்டிவீதம்
மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.10ஆயிரமாகவும், கடன் ரூ.7.50 லட்சம் முதல் 50 லட்சம் வரை 10.15 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிநாடுகளில் சென்று கல்வி பயில்வது கடினமான சூழலாக இருந்தநிலையில் அதை எஸ்பிஐ வங்கி எளிமைப்படுத்தியுள்ளது. குறிப்பாக எம்ஐடி, ஸ்டான்போர்ட், ஹார்வார்ட், ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட முதன்மையான பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களால் பயில முடியும். இந்த கல்விக்கடனை பெற விரும்பும் மாணவர்களிடம் எந்தவிதமான சொத்துப்பத்திரம், பாதுகாப்புப் பத்திரம் தொடர்பான கொலாட்ரல் செக்யூரிட்டியை வங்கி கேட்பதில்லை. நிதி வசதியை காரணம்காட்டி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தும் முடியாத மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பெரிய வாய்ப்பாகும்.
இதையும் படிங்க: எச்எம்பிவி வைரஸ் ஆபத்தானதா, குழந்தைகளை என்ன செய்யும்? குழந்தை நல மருத்துவர்கள் கூறுவது என்ன?