×
 

சீமான் பேசிய பேச்சால் வாக்குகள் எல்லாம் போச்சா?... நாதக வேட்பாளர் விளக்கம்...!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தோல்வி அடைந்தது நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது என அக்கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறும்போது, நாம் தமிழர் கட்சிக்கு இது பின்னடைவு கிடையாது , கடந்த முறை இடைத்தேர்தல் , நாடாளுமன்ற தேர்தல்களை விட வாக்குகள் கூடுதலாக பெற்று வருவதால் பின்னடைவு இல்லை என்றார்.

2026ம் ஆண்டு நிச்சயமாக திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்தப்படும். திமுக கூடுதலாக வாக்குகள் வாங்க காரணம், கள்ள ஓட்டு போட்டதற்கான காரணம் தான் உள்ளது. 

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக! 

2026ம் ஆண்டு தேர்தல் முன்னோட்டமாக இது திமுகவுக்கும் , திமுக தலைமைக்கும் தன் அச்சம் வந்துள்ளது. இதனால் 2026ம் ஆண்டு இந்த மண்ணில் திமுக கடுமையான போராட வேண்டி இருக்கும். 

நாம் தமிழர் கட்சிக்கு போடப்பட்ட வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி விட்டு வேறு கட்சிக்கு போகாது. திமுகவுக்கு எதிராக வாக்குகள் விழுந்தது தான் , நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளது.

தந்தை பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை. சீமான் , பெரியார் குறித்து சரியாக தான் பேசியுள்ளார் என்ற புரிதல் அடிப்படையில் தான் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளது. 

நாம் தமிழர் கட்சி மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் நின்றது. கடந்த இடைத்தேர்தலை விட இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி கூடுதலாக வாக்குகளை பெற்றிருப்பதே , எங்களுக்கு இது வெற்றி தான் என்று சீதாலட்சுமி கூறினார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே சலசலப்பு... நாதக வேட்பாளர் திடீர் வாக்குவாதம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share