×
 

“அதெல்லாம் முடியாது... முடியாது” - சீமானுக்கு சென்னை ஐகோர்ட் கட் அண்ட் கறார் உத்தரவு! 

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சீமானின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சீமானின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாகவும், சர்ச்சையாகவும் பேசியதாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில்  கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.  இந்த வழக்கு தொடர்பான விசாரணை இந்த வழக்கு விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்களிக்கக்கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: பெரியாரா? பிரபாகரனா? மோதிப் பார்த்துவிடலாம் - சீமான் ஆவேசம்....

அந்த மனுவில் சீமானின் பேச்சு வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும், ஆனால் அவரை நேரில் ஆஜராகச் சொல்லி விக்கிரவாண்டி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. சீமான் தரப்பு கோரிக்கையை கேட்ட நீதிபதி, பிடிவாரண்டை திரும்ப பெறக்கூடி விக்கிரவாண்டி நீதிமன்றத்தை நாடவும், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில்  இருந்து விலக்களிக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் சீமான் மனு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

சீமான் பேசியது என்ன? 

கடந்த 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். " நாங்கள் தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை நாங்கள் அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ்  ஆடையில் சீமான்; செருப்பு, துடைப்பத்தால் அடித்து பெரியாரிஸ்டுகள் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share