×
 

டெபாசிட் போனாலும் வாங்கு வங்கியை இரண்டு மடங்கு உயர்த்திய நாதக... ஈரோடு கிழக்கில் உயரும் நாதக கிராஃப்.!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்திருந்தாலும், அக்கட்சியின் வாக்கு வங்கி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2016இல் முதல் முறையாகப் போட்டியிட்ட நாதக1.53 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் 2019 மக்களவைத் தேர்தலில் 4.08 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் நாதகவின் வாக்கு 7.65 சதவீதமாக இருந்தது.

திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு 2023இல் ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இத்தேர்தலில் சற்று வாக்கு வங்கி குறைந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் நாதக 6.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி அடங்கிய ஈரோடு மக்களவைத் தொகுதியில் நாதக சார்பில் கார்மேகன் போட்டியிட்டார். இத்தேர்தலில், ஈரோடு கிழக்கில் மட்டும் அவர் 8.35 சதவீத வாக்குகளைப் பெற்றார்.



தற்போது முடிந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடாத நிலையில், நாதக போட்டியிட்டது.. இதனால், திமுக - நாதக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைத்தார்.இம்முறை நாதக வேட்பாளர் சீதாலட்சுமி  24,151 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அக்கட்சி 15.59 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்தாலும், கடந்த தேர்தலைவிட இருமடங்கு கூடுதல் வாக்குகளை தனித்து போட்டியிட்டு நாதக பெற்றுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகளில் 16.7 சதவீத வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால், டெபாசிட் தொகையை திரும்ப கிடைக்கும்.15.59 சதவீத வாக்குகள் மட்டும் பெற்றதால் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட் தொகை பறிபோயுள்ளது. என்றாலும் வாக்கு வங்கி அதிகரித்திருப்பது நாதகவுக்கு மகிழ்ச்சியளிக்கவே செய்யும்.

இதையும் படிங்க: 2019 முதல் ஆல் ஏரியா நம்ம தான்.! கொக்கரிக்கும் திமுகவினர்

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதியில் பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share