எத்தனை தேர்தல் வந்தாலும் மோடி தான் பிரதமர்... இஃப்தார் விழாவில் ஓபிஎஸ் புகழாரம்!!
இன்னும் எத்தனை முறை இன்னும் எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் பிரதமராக மோடியே வருவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தையொட்டி, அரசியல் கட்சிகள் ஆங்காங்கே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகின்றனர். சமீபத்தில் தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துக்கொண்டு நோன்பு திறந்து தொழுகை மேற்கொண்டார். நோன்பு கஞ்சியையும் அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 3000 பேர் பங்கேற்று இருந்தனர். அந்த வகையில் தற்போது சென்னை எழும்பூர் ஃபைசல் மஹாலில் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ரவி பச்சமுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் பி ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இன்னும் எத்தனை முறை இன்னும் எத்தனை முறை MP தேர்தல் நடந்தாலும் பிரதமராக மோடியே வருவார். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வலம் வருகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென பணியாற்றுகிறார். நாட்டின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டி, பல நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் பண்பு கொண்டவராக மோடி உள்ளார். தமிழ்நாட்டில் யாராலும் தீர்க்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து வைத்த பெருமை மோடியையே சாரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இப்தார் நோன்பு திறப்பா..? பாஜக கூட்டணி அறிவிப்பா..?