×
 

மனைவியை பிரிந்து வாழும் ஒபாமா: விரைவில் விவாகரத்து? டிரம்ப் பதவியேற்பு விழாவிலும் மிச்செல்லி ஒபாமா 'ஆப்சென்ட்'

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மனைவி மிச்செல்லியை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருவரும் தனியாக வாழ்ந்து வருவதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவில் மிச்செல்லி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற பழமைவாத  பாரம்பரியத்தில் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கூட பிரபலங்கள் மட்டுமின்றி நடுத்தர வகுப்பினர் மத்தியிலும் விவாக ரத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் விவாகரத்து ஒன்றும் அதிசயம் இல்லை. அந்த வரிசையில் தற்போது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தம்பதியும் இணைந்துள்ளனர். 

இதையும் படிங்க: "அல்டிமேட் பிக் பாஸ்" : உலகின் வலுவான பிரதமர், நரேந்திர மோடி: பாரதிய ஜனதா பெருமிதம்

அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகிற 20 ஆம் தேதி பதவி ஏற்று கொள்கிறார். இந்த விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமா மட்டுமே பங்கேற்கிறார். அவருடைய மனைவி மிச்செல்லி ஒபாமா இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

சமீபகாலமாக ஒபாமா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருவதாக அமெரிக்கா சமூக வலைத்தளங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் பதிவுகள் வெளியாகி வருகின்றன. 

இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஜிம்மி கார்ட்டர் இறுதிச்சடங்கிலும் ஒபாமாவின் மனைவி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிரம்ப் பதவியேற்பு விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் இருப்பது அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக வெளியாகி வரும் தகவல்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 

வலைத்தள பதிவு ஒன்றில் இந்த தகவலை குறிப்பிட்டு இருக்கும் பதிவர் ஒருவர், 1982 ஆம் ஆண்டு ஒபாமாவின் பழைய கடிதங்களில் அவர் ஆண்களை காதலிக்க விரும்புவதாக கூறியதை இதற்கு உதாரணமாக கூறியிருக்கிறார்.

இதேபோல் பல்வேறு பதிவுகளில் அவர்களுடைய விவாகரத்து பற்றிய வதந்திகள் வெளியாகி வருகின்றன.

1989 ஆம் ஆண்டில் சிக்காகோ சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் போது இந்த ஜோடி சந்தித்து, பின்னர் 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

 அவர்களுக்கு மலியா மற்றும் சாஷா ஒபாமா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: மோடி அரசில் 27% வீழ்ச்சி! டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு ஏன் சரிகிறது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share