பாகிஸ்தான் வான்வழிமூடல்.. எகிறப்போகும் இந்தியாவின் விமானக் கட்டணம்..!
சிந்து நிதிநீர் ஒப்பந்தத்தை இந்திய நிறுத்தி வைத்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தன்னுடைய வான்வழியை இந்தியா பயன்படுத்த தடை விதித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா சார்பில் சிந்து நிதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தன்னுடைய வான்வழியை இந்தியா பயன்படுத்த தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த தடை விதித்துள்ளதால், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள்,தென் அமெரிக்க நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான கட்டணம் கடுமையாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்புக்கு பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வழியைப் பயன்படுத்த தடைவிதித்து தேசிய பாதுகாப்பு குழு முடிவு செய்தது. அது மட்டுமல்லாமல் இந்தியன் ஏர்லைன்ஸ் லீசுக்கு எடுத்த விமானங்கள், ராணுவ விமானங்களும் வான்வழியைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரருக்கு அழைப்பா? என் தேசப்பற்றை சோதிக்காதீர்கள்.. நீரஜ் சோப்ரா வருத்தம்..!
பாகிஸ்தான் வான்வழியை மூடிவிட்டதால், மேற்கு ஆசியா நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்ல கூடுதலாக 20 நிமிடங்கள் ஆகும், அமெரிக்காவுக்கு 90 நிமிடங்கள் கூடுதலாகச் செலவாகும். இதனால் எரிபொருள் அதிகமாகச் செலவாகும், சில நேரங்களில் எரிபொருள் நிரப்பவேண்டிய நிலையும் ஏற்படலாம். இதன் காரணமாக பயணிகள் விமானக் கட்டணம் வரும் நாட்களில் கடுமையாக அதிகரிக்கலாம்.
இன்டிகோ விமானம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் “வடஅமெரிக்காவில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானங்கள், பிரிட்டன், ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகள் வேறு வழிமார்க்கமாக இந்தியா வரும். பாகிஸ்தான் வான்வழி மூடப்பட்டதால் சர்வதேச விமானங்கள் மாற்றுப்பாதை எடுத்து இந்தியா வரும்” எனத் தெரிவித்துள்ளது.
பாகி்ஸ்தான் வான்வழியை மூடிவிட்டதால் சண்டிகாரில் இருந்து துபாய் செல்ல வேண்டிய இன்டிகோ விமானம் 6இ1481, அறிவிப்பு வெளியானவுடன், பாகிஸ்தான் வான்வழியிலிருந்து திருப்பிவிடப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்ட பாதையில் செல்வதற்காக மட்டும் எரிபொருள் நிரப்பியிருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் வான்வழியாக இல்லாமல் சுற்றிச் செல்ல இருந்ததால், கூடுதலாக எரிபொருள் நிரப்ப இருந்தது.
பாகிஸ்தான் வான்வழியை மூடுவது முதல்முறை அல்ல. 2019, பிப்ரவரி 26ம்தேதி புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் வான்வழியை மூடியது. புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாலக்கோட் பகுதியில் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் அரசு தங்களின் வான்வழியை எந்த நாடும் பயன்படுத்த தடைவிதித்திருந்தது. இந்த தடையை 5 மாதங்களுக்குப்பின் 2019, ஜூலை 16ம் தேதி முதல் படிப்படியாக பாகிஸ்தான் நீக்கியது.
இதையும் படிங்க: இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!