×
 

தீவிரவாதிகளுக்கு ஆதரவு தர்றோம் - நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்...! 

அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளுக்காகவே பயங்கரவாதத்திற்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காகவே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருவதாக பாகிஸ்தான் நாட்டினுடைய பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியான ஸ்கை நியூஸ் என்கிற தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் நாட்டினுடைய பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசி நேர்காணல் ஒன்றை அளித்தார். 

அப்போது நெறியாளர் ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாதத்தருக்கு நிதி உதவி அளிப்பது, பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வருவதாக கூறப்படுகிறதே என்ற கேள்வியை முன்வைத்தார்.  அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவிற்காகத்தான் இந்த மோசமான காரியத்தை கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருவதாக குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு மட்டுமல்ல பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காகவும் செய்து வருவதாகவும், அது தவறுதான், அந்த தவறின் காரணமாகவே நாங்கள் ஏராளமான துன்பத்தை அனுபவித்து வருகிறோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தோம்.. பயத்தில் சரண்டர் ஆன பாக். ராணுவ அமைச்சர்!!

சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் அமெரிக்காவோடு நாங்கள் சேர்ந்திருக்காவிட்டால் இன்று பாகிஸ்தான் குற்றமற்ற ஒரு ட்ராக் ரெக்கார்டை கொண்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இது தவிர இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இந்த உறவு மோசமடைந்து வருவது போருக்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். 

இதையும் படிங்க: ஒவ்வொரு உயிருக்கும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.. பழி வாங்குவோம்.. பாக்.-ஐ எச்சரித்த இந்தியா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share