×
 

பாகிஸ்தான் நண்பிக்கு வெறும் 5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ரகசியங்கள்..! 2 பேரை தூக்கிய NIA..!

பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தளம் பற்றிய படங்கள் மற்றும் ரகசிய தகவல்களை பகிர்ந்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறும்போது, "இந்திய கடற்படை குறித்த தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு குழு திரட்டி வருவதாக எங்களுக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது. இது தொடர்பான விசாரணையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தீபக் என்பவர் சிக்கினார்.

மேலும் இருவர்

அவரிடம் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் கார்வார் அருகேயுள்ள கடம்பா கடற்படை தளத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் ஆகாஷ் நாயக், வேதன் தண்டேல் ஆகிய இருவர் பற்றிய தகவல் பற்றிய தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட வேண்டுமா..? மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை..!

இந்த இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும் நட்புடன் பழகி, கடம்பா கடற்படை தளம் குறித்த தகவல்களை கேட்டுள்ளார்.

பரிசுகள் - மாதம் ரூ. 5 ஆயிரம்
பணம் அன்பளிப்பு

இருவருக்கும் அந்தப் பெண் சில பரிசுகளை கொடுத்துள்ளார். மேலும் மாதம் ரூ.5 ஆயிரம் நன்கொடையாக தந்துள்ளார். இதன்படி ஆகாஷும், வேதனும் கடம்பா மற்றும் அங்கோலா கடற்படை தளங்களின் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் இருவரையும் ஹைதராபாத் வரவழைத்து என்ஐஏ விசாரணை நடத்தியது.

இருவரின் செல்போன், லேப்டாப், மின்னஞ்சல், ஃபேஸ்புக் ஆகியவற்றை ஆராய்ந்ததில் புகைப்படங்களும் சில தகவல்களும் பகிர்ந்தது உறுதியானது. இதையடுத்து ஆகாஷ், வேதன் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று கார்வாரில் கைது செய்தனர்" என்று தெரிவித்தனர்.

இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்ற‌னர். 

அதில், இருவரும் பாகிஸ்தானிய பெண்ணுக்கு கடம்பா, அங்கோலா கடற்படை தளங்களின் செயல்பாடுகள் மற்றும் அங்குள்ள போர்க் கப்பல்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்த‌தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

அவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மற்றும் கடற்கரை நடமாட்டங்கள் குறித்த தகவல்களையும் அனுப்பி வைத்திருப்பதாக தெரிகிறது. அங்கோலா மற்றும் கார்வார் போலீசாரின் உதவியுடன் என் ஐ ஏ அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட எண்ணையே குழு இரண்டு டிஎஸ்பி தலைமையில் முக்கியமான உளவு தகவல்களை பெற்ற பின்னர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாக அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களிடம் விசாரணை நடைபெற்றதை சூப்பிரண்டு நாராயணன் உறுதிப்படுத்தினார். 

கைதான அவர்கள் இருவரும் பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் அவெஞ்சர்படுத்தப்பட்டனர் .அதைத் தொடர்ந்து அவர்கள் என் ஐ ஏ சட்டப்பிரிவு காவல் அடைக்கப்பட்டனர்.
 
 

இதையும் படிங்க: இந்தியா- அமெரிக்கா நட்பால் வயிற்றெரிச்சல்... சீனாவின் இறுமாப்பில் விஷத்தை கக்கும் பாகிஸ்தான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share