×
 

#BREAKING: தீவிரவாதிகளை வேட்டையாடியது பாகிஸ்தான்..! அனைத்து பயணிகளும் மீட்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 21 பயணிகளும் நான்கு துணை ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 21 பயணிகளும் நான்கு துணை ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர்  லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் தெரிவித்தார்.

குவெட்டாவிலிருந்து பெஷாவரை நோக்கி சுமார் 400 பயணிகளுடன் ஒன்பது பெட்டிகளில் பயணித்த இந்த ரயில், குடலார் மற்றும் பிரு குன்ரி என்ற மலைப்பகுதியில், குவெட்டாவிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளால் தடம் புரளச் செய்து  கடத்தப்பட்டது.

 இந்த நிலையில்  தொலைக்காட்சியில் பேசிய லெப். ஜென். ஷரீஃப், பாதுகாப்பு படைகள் மாலை வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்து, சம்பவத்தில் ஈடுபட்ட 33 பயங்கரவாதிகளையும் கொன்று, மீதமுள்ள பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உயிரோடு விட்ருங்க.. காலில் விழுந்து கெஞ்சினோம்..! பாக். ஜாபர் எக்ஸ்பிரஸ் திகில் சாட்சி..!

 “இராணுவம் அனைத்து பயங்கரவாதிகளையும் அழித்து, பணயக்கைதிகளை விடுவித்தது,” என்று அவர் கூறினார்.

தாக்குதலின் ஆரம்பத்தில் 21 பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும், மோதலில் நான்கு எல்லைப்படை வீரர்களும் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பலோச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத குழு, செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று, ஆறு வீரர்களை கொன்றதாக கூறியது. ஆனால், இராணுவத்தின் அறிக்கை அதிக உயிரிழப்புகளையும், பயங்கரவாதிகள் முழுமையாக அழிக்கப்பட்டதையும் உறுதிப்படுதினர்.

பலுசிஸ்தானில் பிரிவினைவாத வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், ராணுவத்தின் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான பதிலடியாக பார்க்கப்படுகிறது. கனிம வளங்கள் நிறைந்த இப்பகுதியில் நீண்டகாலமாக நிலவும் அமைதியின்மையை மீட்டெடுக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் பயணிகள் ரயில் கடத்தப்பட்டு தற்போது அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 27 தீவிரவாதிகளை போட்டு தள்ளிய பாக். ராணுவம்..! 155 ரயில் பயணிகள் உயிரோடு மீட்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share