தொப்பியில் 804 என்று எழுதிய பாக். வீரர்... ஒரு மில்லியன் அபராதம்; காரணம் என்ன?
முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக வாசகங்களை காண்பித்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அமிர் ஜமாலுக்கு ஒரு மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி பிறகு கவிழ்க்கப்பட்டது. இம்ரான் கான் பிரதமர் பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்கள் செய்ததாக அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக தனது பதவிக் காலத்தில் இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் இணைந்து, ‘அல் குவாதிர் டிரஸ்ட் தொடங்கினர்.
அதன் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி புஷ்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையையும் வழங்கப்பட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக வாசகங்களை காண்பித்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அமிர் ஜமாலுக்கு ஒரு மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பயிற்சிக்கு வந்த ஜமால், தனது தொப்பியில் ‘804’ என்று எழுதி இருந்தார். அது இம்ரான் கான் இருக்கும் சிறையின் எண்ணாகும்.
இதையும் படிங்க: இந்தியாகாரனுக்கா பிள்ளையை பெத்திருக்க.. கோபத்தில் கொழுந்துவிட்டு எரியும் பாகிஸ்தான் கணவன்..!
ஜமால் போட்டியின்போது மட்டுமின்றி பயிற்சியின் போதும் இதுபோன்று பல அரசியல் தொடர்பான செய்கைகளை காண்பித்துள்ளார். போட்டியின் போது அரசியல் செய்கைகளை காண்பிப்பது ஐ.சி.சி. விதி மீறலாகும். அதனை பிரதிபலிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நடத்தை விதியும் உள்ளது. அமிர் ஜமால் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 8 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 6 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்பட பல வீரர்களுக்கு அபராதம் விதித்தது. மேலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்கு தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆபத்தில் பாகிஸ்தான்... ஷாபாஸ் அரசு மீது கடும் கோபம்: போருக்கு அழைப்பு விடுக்கும் ராணுவத் தளபதி..!