கெடு முடிந்தும் செல்லாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை.. அதிரடி முடிவுக்கு தயாராகும் அரசு?
இந்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இந்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் பஹல்காமில் பாகிஸ்தானோடு தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாஹா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
மேலும் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனையடுத்து சார்க் விசா வைத்துள்ளவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மருத்துவ விசாவில் வந்தவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (ஏப். 29) முடிவடைகிறது.
இதையும் படிங்க: சிகிச்சைக்காக 2 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தானியர்.. இக்கட்டான சூழலால் பரிதவிக்கும் தந்தை..!
வருகை, வணிகம், திரைப்படம், பத்திரிகையாளர், போக்குவரத்து, மாநாடு, மலையேறுதல், மாணவர், பார்வையாளர், குழு சுற்றுலா, யாத்ரீகர் மற்றும் குழு யாத்திரை உள்ளிட்ட 12 பிரிவுகளில் விசாக்களை பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஏப்ரல் 27-ம் தேதியுடன் அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறியி இருக்க வேண்டும். ஆனால், ஏராளமானோர் இன்னும் செல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் காலக்கெடுவுக்கு பின்னரும் இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025-ன் படி, சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக பெற்றுத்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாங்க அணு ஆயுத நாடு.. எதுக்கும் பயப்பட மாட்டோம்.. பாக். துணை பிரதமர் திமிர் பேச்சு..!