வெளிநாட்டு வேலையா..? உஷார்..! பாலஸ்தீனத்தில் 'சிறை' வைக்கப்பட்ட இந்தியர்கள்... 10 பேரை மீட்ட இஸ்ரேல் ராணுவம்..!
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, இந்தியர்களை பாலஸ்தீனத்திற்கு அழைத்து சென்று சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாலஸ்தீனத்தில் ஒரு மாதம் வரை ஒரு அறையில் அடைத்து சிறை வைத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர்களில் 10 பேரை மேற்குத் கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இப்படி ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் அங்கு போனதும் அவர்களுடைய பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு அவர்களின் பெயரில் இஸ்ரேலுக்குள் நுழைய பாலஸ்தீனர்கள் திட்டமிட்டு இருந்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
கட்டுமான பணிகளுக்கு என்று பலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல இந்தியர்களை மேற்கு கரை பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் மீட்டிருக்கிறார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு அதிகமாக அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்... இன அழிப்பு தடுக்கப்படுமா?
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகமும் 10 இந்தியர்கள் மீட்கப்பட தகவலை உறுதி செய்து இருக்கிறது. இந்த விவகாரம் தொடர் விசாரணையில் இருந்து வருவதாகவும், அவர்களுடைய பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் இந்திய தூதரகம் அறிவித்திருக்கிறது.
இஸ்ரேலிய மக்கள்தொகை மற்றும் குடி வரவு ஆணையத்தின் தகவல் படி வேலைவாய்ப்பை பெற்று தருவதாக பொய்யான வாக்குறுதியின் பெயரில் மேற்கு கரை கிராமமான அல்சாயெம் பகுதிக்கு பாலஸ்தீனர்களால் இந்த தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட விரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு அவற்றை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.
இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடி வரவு ஆணையம் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் மற்றும் நீதி அமைச்சகம் ஆகியவை இரவு முழுவதும் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. அதிகாரிகள் அவர்களுடைய வேலைவாய்ப்பு நிலையை தீர்மானிக்கும் வரை அந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்திய பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தப்படுவதை ஐ.டி.எப் கண்டறிந்து அவற்றை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி அனுப்பியது. இஸ்ரேலிய சோதனை சாவடிகளை தவிர்ப்பதற்காக பாலஸ்தீனர்கள் ஆவணங்களை பயன்படுத்தியதாக செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பின்னர் இஸ்ரேல் படையினர் ஒரு சோதனை சாவடியில் சில சந்தேக நபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது இந்த விவகாரம் தெரிய வந்து தொழிலாளர்களின் மீட்புக்கு வழி வகுத்தது.
இஸ்ரேல் தனது கட்டுமானத்துறையில் இந்திய தொழிலாளர்களின் வருகை பற்றி கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. கடந்த ஆண்டில் 16 ஆயிரம் பேர் இஸ்ரேல் வந்துள்ளனர். ஹமாஸ், தீவிரவாதிகளின் அக்டோபர் 7 2023 தாக்குதலுக்கு பிறகு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய இஸ்ரேல் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த ஆள் சேர்ப்பு நடந்துள்ளது.
இதையும் படிங்க: காசாவைக் கைப்பற்றுவோம்..! பாலஸ்தீனியர்களை விரட்டுவோம்..! அதிபர் டிரம்ப் அதிரடி