×
 

பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குக..! சத்துணவு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஏப்ரல் 24ஆம் தேதி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி சென்னையில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.நாராயணன் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... குறைந்தபட்ச இ.பி.எஃப் பென்சன் 7500; பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புதல்..!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசுத் துறையில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியரின் முதுமை கால வாழ்வாதாரம் கருதி, சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு ஓய்வூதியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், இன்றைய சூழலில் அந்த சிறப்பு ஓய்வூதியமான ரூ.2 ஆயிரம் கால் வயிற்று பசிக்குக்கூட உதவவில்லை. ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி நீண்ட காலமாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் போராடி வருகிறது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது என்றும் ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தனது அரசின் கடைசி பட்ஜெட் அறிவிப்பிலும்கூட தங்களது கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது வேதனைக்குரியது எனவும் இதே அரசுதான் வருவாய் கிராம உதவியாளருக்கு ரூ.5,500, கோயில் பூசாரிக்கு ரூ.4 ஆயிரம், காவல்துறை மோப்ப நாய்க்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

ஆனால், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கு ‘கலைஞர் உரிமைத் தொகை’ கூட தரக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. தனது தேர்தல் வாக்குறுதியைகூட நிறைவேற்றாத தமிழக அரசின் வஞ்சக அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார். எனவே, சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6,750 உயர்த்தி வழங்கக் கோரி வரும் ஏப்ரல் 24-ம் தேதி சென்னை காமராஜர் சாலையில் உள்ள சமூக நல ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத் துறை அறிக்கையால் ஆடிபோன திமுக.. தூக்கி எறியப்படும் திமுக ஆட்சி.. எல்.முருகன் ஆவேசம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share