×
 

பிலிப்பைன்ஸில் கொசுக்கு கிராக்கி! டெங்குவை கட்டுப்படுத்த நூதன திட்டம் அமல்.. கொசுவை பிடித்து கொடுத்தால் சன்மானம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொசுவினால் ஏற்படும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற கொசுவை உயிருடனோ, உயிரில்லாமலோ பிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதுமே கொசுத்தொல்லை பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது. டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு அதி தீவிர நோய்கள் கொசுக்கள் மூலமாகவே பரவுகின்றன. இவை சில சமயங்களில் இறப்பை கூட ஏற்படுத்தி விடுகின்றன. மனிதனுக்கு இறப்பை ஏற்படுத்தும் உயிரினங்களில் அதிக காலமாகவே கொசுக்கள் தான் முதலிடம் பிடித்து வருகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 7,25,000 மக்கள் கொசுக்களினால் ஏற்படும் நோய் தொற்றால் இறப்பதாக World Health Organization எனப்படும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய கொசுக்களை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பது, கொசுக்கள் உற்பத்தி ஆகும் என கண்டறியப்பட்ட இடங்களை சுத்தமாக பராமறிப்பது, கொசு மருந்து தெளிப்பது போன்று எண்ணற்ற வழிகளை உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன. மக்களும் வீடுகளில் கொசுக்களை விரட்டு பல்வேறு ரசாயன பொருட்களை உபயோகித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் அரசு ஊழியர்கள் நூதனப் போராட்டம்.. முழு ஓய்வூதியத்தையும் வழங்க கோரிக்கை..!

இந்நிலையில் பிலிப்பைன்சில் கொசுதொல்லை அதிதீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்சில் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகம் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகருக்கு உட்பட்ட அடிஷன் மலைக் கிராமத்தில், கடந்த 2 மாதங்களில் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதித்த 2 மாணவர்கள் உயிரிழந்தது அந்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகம் நூதன நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதில், பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து தந்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என கிராம தலைவர் கார்லிட்டோ செர்னல் அறிவித்துள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த உள்ளூர் மக்கள், கொத்துக் கொத்தாக கொசுக்களைப் பிடித்துக் கொண்டு, பணம் பெறுவதற்கு படையெடுக்கத் தொடங்கினர்.

இதுவரை மொத்தம் 21 பேர் வெகுமதியைப் பெற்றுள்ளனர். 700 கொசுக்களை மக்கள் கொண்டு வந்துள்ளனர் என கிராம தலைவர் கார்லிட்டோ செர்னல் தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் வீட்டில் அதிக தண்ணீரை தேக்கி வைத்து கொசுவை உற்பத்தி செய்வார்கள். இதனால் தொற்று பாதிப்பு அதிகரிக்குமே தவிர எந்த பலனும் இல்லை' என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தெருக்களை சுத்தம் செய்யவும், கொசுக்கள் முட்டையிடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது போன்ற தற்போதைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, இந்த பரிசுத் தொகை வழங்கப்படுவதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 21 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த 'அந்த' பொருள்! ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share