×
 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா! தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு...!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் நடைபெற்றவுள்ள மகாசிவராத்திரி பெருவிழாவினை இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சிவராத்திரி இரவு சிவ பக்தர்கள் கண்விழித்து இறைவனை வழிபாடு செய்வார்கள். அப்படி சிவராத்திரிக்கு கண்விழித்து வழிபாடு மேற்கொண்டால் சிவ பெருமானின் பரிப்பூரண அருளை பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு

சிவராத்திரி நேரத்தில் சிவ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனை ஆகியவை செய்யப்படும். திருமாலும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடிமுடி காணாது திகைத்து போய் நின்றபோது லிங்கோத்பவராக காட்சி அளித்த தினமே சிவராத்திரி.

அப்படியாக இன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும், இசை, நாட்டியம், பக்தி சொற்பொழிவுகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதன் ஒரு பகுதியாக, மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளார்.

 

இதையும் படிங்க: கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள்....அடுத்தடுத்த அதிர்ச்சி...ரூ.6.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share