அமைதி, ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்..! பிரதமர் மோடி புனித வெள்ளி வாழ்த்து..!
இந்த புனித வெள்ளி தினத்தன்று இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று புனித வெள்ளி தினம் என்பதால் அனைத்து கிறிஸ்தவ பேராலாயங்களிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நாம் நினைவுகூர்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்..! சீமான் வலியுறுத்தல்..!
இந்த நாள், கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் இருக்கவும் நம்மைத் தூண்டுகிறது என்றும் அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் - மன்னார் இடையே மீண்டும் படகு சேவை..இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.. இலங்கை அதிபர் அறிவிப்பு!