மறக்க முடியாத தெய்வீக காட்சியை உருவாக்கியது மகா கும்பமேளா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி..!
மகா கும்பமேளா நிகழ்ச்சியின் 45 நாட்கள் மறக்க முடியாத தெய்வீக காட்சியை உருவாக்கியதாக பிரதமர் மோடி நெகிழ்ந்து கூறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பதாகக் கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வந்த கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கும்பமேளா நிகழ்ச்சி உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றது.
பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கி பல்வேறு வசதிகளை மேற்கொண்டன. இதனிடையே, 66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திரிவேணி சங்கத்தில் புனித நீராடி உள்ளதாக உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! ரூ.1754 கோடி தேர்தலுக்காக செலவு செய்த பாஜக... வருமானத்திலும் முதலிடம்..!
கும்பமேளா தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் இருந்து சாதுக்கள், அகோரிகள், மடாதிபதிகள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.இனி 2169ஆம் ஆண்டுதான் கும்பமேளா நடைபெறும் என்று கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இனிதே நிறைவுற்ற மகா கும்பமேளா குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகா கும்பம் நிறைவடைந்தது, இந்த மாபெரும் ஒற்றுமைக்கான மகாயஜ்ஞம் நிறைவடைந்தது, 140 கோடி இந்தியர்கள் பிரயாக்ராஜில் ஒற்றுமையின் இந்த மாபெரும் சங்கமத்தில் 45 நாட்கள் நம்பிக்கையுடன் கூடிய விதம் உண்மையிலேயே அபாரமானது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த 45 நாட்கள் ஒரு மறக்க முடியாத தெய்வீக காட்சியை உருவாக்கியது என தெரிவித்துள்ளார்.
மேலும், திரிவேணி சங்கமத்தில், தான் புனித நீராடிய புகைப்படங்களையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: 'யார் வெளியேறினாலும் பாதிப்பில்லை...' ஷிண்டேவிடம் கெத்துக் காட்டும் ஃப்ட்னாவிஸ்..!